நாம் ஒரு பாடலை விரும்பி கேட்கலாம் ஆனால் பாடல் முழுவதையும் கேட்க பிடிக்காமல் இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு சில வரிகளை மட்டுமே பிடித்திருக்கும். அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கேட்கலாம். செல்போனில் ரிங்டோன் அமைக்க வேண்டுமெனில் ஒருபாடலுடைய குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அமைத்துக்கொள்வோம். இவ்வாறு ஒரு பாடலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டுமெனில் நாம்
ஒரு ஆடியோ கட்டரின் உதவியை பெற வேண்டும். அந்த வகையில் உள்ள மென்பொருள் தான் Weeny Free Audio Cutter இந்த மென்பொருள் மூலமாக எளிமையான முறையில் ஆடியோவினை பிரித்துக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ பைல்களை ஒன்றினைக்கவும் முடியும். ஆடியோ பைல்களை ஒன்றினைக்கும் போது பல்வேறு அளவுடைய பைல்களை இந்த மென்பொருள் ஆதரிக்கும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:6.06MB |