தலைவன் படத்திற்காக மூன்று வேடத்தில் உலுக்க வரும் விஜய்!
நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். தாண்டவம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஏ.எல்.விஜய்யும் அடுத்ததாக தலைவன் படத்திற்காக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். ஒருபுறம் இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு வேகமாக நடந்துவருகிறது. தலைவன் படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் ஏ.எல்.விஜய், பாடகர் விஜய் யேசுதாஸை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது.