தற்போதுள்ள காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகம் உள்ளன. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் அந்த கூந்தல் உதிர்வதால், பெண்களுக்கு கூந்தல் மெல்லியதாக தான் காணப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு அழகை கெடுக்கும் வகையில் வலுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஆண்கள் இளமையிலேயே முதிய தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய கூந்தல் உதிர்தலுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
ஆயிரமாயிரம் அப்ளிக்கேஷன்களை வழங்கும் கூகுள் நிறுவனம் புதிதாக கேலன்டர் அப்ளிக்கேஷனை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்ளிக்கேஷனை தனது பிரசித்தி பெற்ற கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். கூகுள் மேப்ஸ், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன், ஜிமெயில் ஃப்ரீ எஸ்எம்எஸ் என்று பல தொழில் நுட்ப வசதிகளை வழங்கிய கூகுள் நிறுவனத்திற்கு இந்த வசதிகள் ஒன்றும் பெரிய விஷயமல்ல தான். இருப்பினும் இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனில் இருக்கும் வசதிகள் பற்றி பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பிரியா ஆனந்த், அதற்கு பின், சில விளம்பர படங்களிலும் நடித்தார். "சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இல்லையேஎன, ஏங்கிக் கொண்டிருந்த பிரியாவுக்கு, "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் வெற்றியால், பாலிவுட்டில் உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில், பிரியாவின் நடிப்பை பார்த்து வியந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள், தங்களின் அடுத்த படங்களுக்கு அவரை "புக் செய்ய, ஆர்வம் காட்டுகின்றனர்.
அங்காடித்தெரு அஞ்சலியை கலகலப்பு படம் மாஸ் நடிகையாக்கி விட்டது. அதுவரையில் அவரை கண்டுகொள்ளாதிருந்த அண்டை மாநில இயக்குனர்கள் அந்த படத்தில் அவர் நறுக் ஆட்டம் போட்டதைப்பார்த்து ஆடிப்போனார்கள். இந்த குடும்ப நடிகைக்குள் இப்படியும் ஒரு அயிட்டம் நடிகை குடியிருக்கிறாரா? என்று அசந்து போனார்கள். அதனால் அதே மூடில் அஞ்சலியை ஆந்திராவுக்கு வரவைத்து கேட்ட சம்பளத்தை கொடுத்து கால்சீட்டையும், அஞ்சலியையும் கேட்ச் பண்ணி விட்டனர்.
மாற்றான் வெளியானதும் தாண்டவத்தின் வசூல் தடுமாறிவிட்டது. பல இடங்களில் படத்தை தூக்கிவிட்டனர். வெளிநாட்டில் இரண்டாவது வார இறுதிவரை வசூல் எப்படி, பார்ப்போம். யுகே-யில் இரண்டாவது வார இறுதியில் 9,633 பவுண்ட்களை இப்படம் வசூலித்துள்ளது. மொத்தம் 69,078 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 57.58 லட்சங்கள். யுஎஸ்ஏ-வில் இரண்டாவது வார இறுதியில் 21 திரையிடல்களில் 37,953 அமெரிக்கன் டாலர்கள். இதுவரை 1,83,661 அமெரிக்கன் டாலர்கள்.