பொங்கலுக்கு திரைக்கு வரும் படங்கள்


தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூல் சீஸனான பொங்கல் விடுமுறையைக் கொண்டாட வழக்கமாக ஏகப்பட்ட படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 5 படங்கள் வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விஸ்வரூபம் பின்வாங்கியதால், இப்போது ஐந்து படங்கள் வெளியாக உள்ளன. அவற்றைப் பற்றி ஒரு அலசல்... 
அலெக்ஸ் பாண்டியன் 
கார்த்தி - அனுஷ்கா - சந்தானம் நடித்துள்ள இந்தப் படம்தான் இந்த பொங்கலின் நிச்சய ஹிட் என்கிறார்கள். சுராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்குமேல் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளும் அதிகமாகம். கார்த்தி கேரியரில் மிகப்பெரிய ரிலீஸ் இந்தப் படம். நாளையே படம் வெளியாகிறது.

சமர் 
தியேட்டர்கள் பற்றாக்குறையால் வருமா வராதா என்று கடைசி வரை தவித்துக் கொண்டிருந்த படம் சமர். விஷால் - த்ரிஷா முதல் முறை ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தை திரு இயக்கியுள்ளார். தமிழகத்தில் 300 அரங்குகள் வரை இப்போது படத்துக்கு கிடைத்துள்ளன. ஜனவரி 13-ம் தேதி போகியன்று படம் வெளியாகிறது.

புத்தகம் 
நடிகர் ஆர்யாவின் தம்பி, சத்யா, இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் புத்தகம். ராகுல் ப்ரீத்தம் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ளார். 

விஜயநகரம் 
கல்வி நிறுவனங்களில் நடக்கும் மதிப்பெண் மோசடியை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் விஜயநகரம். இந்தப்படத்தில் சிவன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஹாசினி நடிக்கிறார். இவர்களுடன் பானுசந்தர், ஆர்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தன்வீர் இயக்கியுள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா 
திருட்டுக் கதை என்ற இமேஜ் விழுந்ததால் டேமேஜாகிப் போயிருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையாவும் இந்தப் பொங்கலுக்கு, 300 திரையரங்குகளில் வெளியாகிறது. திரையில் காமெடியனாக இருந்த சந்தானம், நிஜத்தில் வில்லனாகக் காட்சி தருகிறார் இந்தப் படம் மூலம். தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்ட சீனிவாசனை நம்பி பெரிதாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget