சென்சார் சான்றிதழ் பெறப்பட்ட பின்னரும், விஸ்வரூபம் படத்தை ஏன் தடை செய்தார்கள் என்பது புரியவில்லை என்று வாணி கணபதி கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் முதல் மனைவி மற்றும் முன்னாள் மனைவி வாணி கணபதி. பெங்களூரில் செட்டிலாகி அங்கு வசித்து வரும் அவர் விஸ்வரூபம் பட சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனின் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக அவர் குறிப்பிட்டுச் சொன்னதாவது...
சென்சார் சான்றிதழ் பெற்ற ஒரு படத்தை ஏன் தடை செய்துள்ளனர் என்பது தெரியவில்லை, புரியவில்லை. நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம். எதிர்ப்பு தெரிவிக்க விரும்புவோர் தாராளமாக எதிர்க்கலாம், அதில் எந்தத் தவறும் இல்லை. அதேசமயம், பார்க்க விரும்புவோருக்கும், பார்க்கும் உரிமை உள்ளது. அதையும் யாரும் மறந்து விடக் கூடாது. ஒரு படத்தைத் தயாரிப்பவர் அதை சுதந்திரமாக தயாரிக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தான் சொல்ல நினைப்பதை சொல்ல உரிமை உண்டு, சுதந்திரம் உண்டு. ஒரு நாட்டில் வசிப்பதும்,வசிக்காததும் அவரவர் விருப்பம். அதில் யாரும் குறுக்கிட முடியாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் உண்டு. அதில் யாரும் குறுக்கிட முடியாது என்றார் வாணி கணபதி.