அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற தகுதி தமிழ் சினிமாவில் யாருக்கு இருக்கிறது? என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளது.
ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய், அஜீத் இருவரும்தான் இருக்கிறார்கள். இவர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள். யாருக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். விஜய், அஜீத்துக்கு அடுத்தப்படியாக சூர்யா, விக்ரம் ஆகியோரும் இந்தப்பட்டியலில் இருக்கின்றனர். ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்னை கோலிவுட்டில் முன்பொரு முறை ஏற்பட்டு பின்னர் அது அடங்கி விட்டது. ஆனால் இப்போது போர்ப்ஸ் இணைய தளம் தீ பற்ற வைத்து விட்டிருப்பதால், முன்னணி நடிகர்கள் மத்தியில் யார் அந்த பட்டத்தை கைப்பற்றுவது என்கிற திரைமறைவு வேலைகளில் படு தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் எந்த முன்னணி சினிமா ஜாம்பவான்களின் வாயிலிருந்து அந்த வார்த்தை முதலில் வெளிப்படுகிறதோ அந்த நடிகரே அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற பெருமை பெறுவார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை அனைவருமே ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கியுள்ளனர்.