நடிகை ஆருஷி சிறப்பு பேட்டி


எஸ்.எம்.எஸ் தியேட்டர்ஸ் சார்பில், பி.எல்.ஆர். இளங்கண்ணன் இயக்கும் படம் அடித்தளம். இப்படத்தின் நாயகனாக "அங்காடித்தெரு" மகேஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக ஆருஷி நடிக்கிறார். கட்டட தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கி வருகிறார் டைரக்டர் இளங்கண்ணன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
படத்தின் ஆடியோ சி.டி.யை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, கட்டிட தொழிலாளர்கள் அதனை பெற்றுக் கொண்டனர். 

விழாவில் பேசிய படத்தின் கதாநாயகி ஆருஷி, இந்தப்படத்தின் கதையை சொல்லாமலே என்னை நடிக்க வைத்தார் டைரக்டர். முதலில் எடுத்தவுடன், ஒரு அழுக்கு புடவையை கொடுத்தார். ஐயோ, இதை போய் கட்டணுமா என்று நினைத்துக் கொண்டே கட்டினேன். டல் மேக்கப் போட்டாங்க. நிறைய செங்கல்லை எடுத்து தலையில் அடுக்கினாங்க. என்னுடைய வீட்டில் நான் ஒரு வேலையும் செய்யாமல் செல்லமா வளர்ந்ததால் கஷ்டம்ன்னா என்னவென்று அப்போதுதான் புரிந்தது. அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்த பிறகுதான் எனக்கு இந்த படத்தின் கதையையே சொன்னார். 

படப்பிடிப்பு சின்ன குடிசையில் நடந்தது. அந்த வீட்டை நானே பெருக்கி, நானே பாத்திரம் தேய்த்து வேலை செய்வேன். இதற்கு முன் வீட்டில் ஒரு வேலையும் நான் செய்தது இல்லை. அங்கே எல்லா வேலைகளையும் நானே செய்யும்போது கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் தண்ணி எடுக்க குடத்தை இடுப்பில் வைத்தபோதுதான் படாத பாடு பட்டுவிட்டேன். குடம் இடுப்பிலேயே நிற்கவில்லை. குடத்தின் மேல் கான்சன்ட்ரேஷன் போச்சுன்னா டயலாக் மறந்துடுது. டயலாக்கை மனசில் வைத்துக் கொண்டால் குடம் தடுமாறுது. ரொம்ப அவஸ்தை பட்டு எப்படியோ கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்தேன். அதற்கான பலன் கைகூடி வரும்னு நம்புறேன் என்றார் ஆருஷி. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget