நடிகர் ஆர்யாவும், நடிகை நயன்தாராவும் பரஸ்பரம் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். திரையுலகத்தை விட்டே நகர்ந்து நின்ற போதும் ஆர்யா, நயன்தாரா நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. சமீபத்தில் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனே சர்ச்சில் ரகசியத்திருமணம் நடந்ததாக செய்தி பரவியதும் கோடம்பாக்கம் முதற்கொண்டு ஹைதராபாத் வரை பரபரப்பு உண்டானது. ஆனால் அந்த பரபரப்பு உருவான வேகத்தில்
அடங்கியும் போனது. “அட ராஜா ராணி படத்துல வர்ற காட்சிக்காக நடந்த கல்யாணமாம்பா அது” என ‘உச்’ கொட்டிவிட்டு அடுத்த வேலையில் கவனத்தை செலுத்தின கோலிவுட்டும், டோலிவுட்டும்.
அந்த பரபரப்பு ராஜா ராணி படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்ததாலோ என்னவோ, ராஜா ராணி திரைப்படக்குழுவும் அதே முறையை பின்பற்றி இருக்கிறது. படத்திற்கான புரமோஷனுக்காக ஆர்யா நயன்தாரா மோதிரம் மாற்றுவது போன்ற ஃபோட்டோவை 'Arya Weds Nayanthara' என்ற எழுத்துகளுடன் வெளியிட்டிருக்கின்றனர்.
அந்த திருமண அழைப்பிதழில் மே 11-ஆம் தேதி 9 மணிக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.