கண்ணில் உள்ள கரு வளையங்களை குணமாக்குவது எப்படி


இரும்பு சத்து குறைகிற போது, பரம்பரை வழியால், போதிய அளவு தூக்கமின்மையால், அளவுக்கதிகமாக கண்களுக்கு வேலை கொடுப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டி.வி முன்னாடி உட்கார்ந்திருப்பது, போஷாக்கில்லாத ஆகாரம் சாப்பிடுவது போன்ற காரணங்களால் கண்களை சுற்றி கரு வளையம் வருகிறது. புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும்
உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை கண்டிப்பாக இருக்கும். சருமத்திற்குத் தேவையான வைட்டமின் சி-யை இந்தப் பழக்கங்கள் குறைப்பதால் அதன் விளைவாகக் கருவளையங்கள் தோன்றுகின்றன. 

கண் பார்வையில் கோளாறு உள்ளவர்களுக்குக் கூட சில சமயம் இதுமாதிரி கருவளையங்கள் ஏற்படலாம். எனவே கண் பார்வைக்கான சிகிச்சை சரியாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்தப் பிரச்னை குணமாக வாய்ப்புண்டு.   

தூங்கும் போது தலை கீழாகவும், கால்கள் மேலாகவும் இருக்கும்படி தூங்கினால் முகத்திற்கு இரத்த ஒட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதன் விளைவாகவும் கரு வளையங்கள் குறையும். தலையணை இல்லாமல் தூங்கும் பழக்கமும் கருவளையங்களைக் குணமாக்குவதில் உதவும்.   

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாகக் கண்களில் போடப்பட்ட மேக்கப்பை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கருவளையங்கள் கண்டிப்பாக வரும்.  கண்களுக்கு உபயோகிக்கும் மேக்கப் சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.   

இரும்புச் சத்தும், வைட்டமின்களும் அதிகமுள்ள உணவுகள் நிறைய சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். வெயிலில் வெளியே போகும் போது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள் அணிந்து செல்ல வேண்டும்.   மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் கருவளையங்கள் வராமலிருக்க மிக முக்கியம். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget