கூகுள் தேடுதளம் தரும் நவீன வசதிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவ்வளவாகப் பலரும் அறியாத அல்லது அடிக்கடி பயன்படுத்தாத சில தேடுதல் வழிகளும், அவற்றை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இங்கு காணலாம்.
1.கூகுள் குரூப்ஸ் தளங்களிலிருந்து வரையறைகளுடன் தேடல்
author: குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து ஒரு மின் அஞ்சல் குழுவில் உள்ள தகவல்கள் அடங்கிய செய்திகளைப் பெற – fried chicken author:lakshmi author:manjula (லஷ்மி மஞ்சுளா என்பவர் எழுதிய fried chicken குறித்த கட்டுரைகள்)
group: குறிப்பிட்ட நியூஸ் குரூப்பில் இருந்து குரூப் மெசேஜ் பெற – kalki novels group:tamilnovels.books (கல்கியின் நாவல்கள் குறித்து tamilnovels.books என்ற குரூப்பில் இருந்து தகவல்கள் பெற)
insubject: சப்ஜெக்ட் லைன் கட்டத்தில் குறிப்பிட்ட பொருள் குறித்து எழுதப்பட்ட அஞ்சல் செய்திகளைப் பெற – insubject:"koodangulam" (சப்ஜெக்ட் கட்டத்தில் கூடங்குளம் என்ற சொல் கொண்ட மின் அஞ்சல்களைப் பெற)
location: குறிப்பிட்ட இடம் சார்ந்த தளங்களிலிருந்து செய்தி மற்றும் தகவல்கள் பெற – சர்ச் பாக்ஸில் Obama location: தடு (ஒபாமா குறித்த பிரிட்டிஷ் செய்தி தகவல்களைப் பெற)
source: குறிப்பிட்ட மூல தரவுகளிலிருந்து, தேடும் தகவல் குறித்த செய்திகளைப் பெற – peace source:washington_post அமைதி குறித்த கட்டுரைகளை washington_post என்ற அமெரிக்க செய்தித்தாள் தரவுக் கோப்பிலிருந்து பெற
2. இணைய தளங்களைப் பற்றிய தேடல்கள்:
cache: கூகுள் ஏற்கனவே குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து சேமித்து வைத்த தகவல்களைப் பெற cache: www.nilavaithedi.in நிலைவைதேடி தளம் சார்ந்து கூகுள் சேர்த்து வைத்த செய்திகளைப் பெற
info: குறிப்பிட்ட இணைய தளப் பக்கம் குறித்த தகவல்களைப் பெற – info: www.nilavaithedi.in நிலைவைதேடி இணையதளம் குறித்த தகவல்களைப் பெற.
related: குறிப்பிட்ட இணைய தளம் போன்ற அல்லது சார்புள்ள மற்ற இணையதளங்கள் குறித்த தகவல்களைப் பெற – related: www.nilavaithedi.in நிலைவைதேடி இணைய தளம் போன்ற அல்லது அதனுடன் தொடர்புள்ள மற்ற இணைய தளங்கள் குறித்த தகவல்களைப் பெற.
3. சில அடிப்படை தேடல்களின் எடுத்துக் காட்டுகள்:
முதலில் தேடல் சொற்களும், அடுத்து அவை எந்த பக்கங்களைக் காட்டும் எனவும் தரப்பட்டுள்ளது.
malware and taiwan malware மற்றும் taiwan ஆகிய சொற்கள் கொண்ட இணையப் பக்கங்கள்.
recycled plastic OR iron: மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அல்லது இரும்பு குறித்த தகவல்கள்
"I have a dream" மிகச் சரியாக I have a dream என டெக்ஸ்ட் கொண்ட இணையப் பக்கங்களின் பட்டியல்.
salsa dance salsa என்ற சொல், ஆனால், அவற்றில் dance என்ற சொல் இல்லாத இணையப் பக்கங்கள்.
castle ~glossary : castle என்ற சொல் உள்ள சொல் களஞ்சியம், அகராதி, சொல் கூறு மற்றும் பிற தகவல்கள் உள்ள இணையப் பக்கம் அறிய.
define:imbroglio: இணையப் பக்கங்களிலிருந்து imbroglio என்ற சொல் குறித்த விளக்கங்கள்.
மேலே காட்டியுள்ளது போல இன்னும் சிலவகை தேடல் வகைகளும் உள்ளன.