தாய்மை அடைந்ததை உறுதி செய்வது எப்படி


பெண்களுக்கு தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்வதற்கான முதல் வழி, அவர்களது மாத விலக்கு தள்ளிப்போவதாகும். பொதுவாக மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் மாதவிலக்காகும் பெண்களுக்கு மாதவிலக்கு தள்ளிப்போவதை அடிப்படையாக வைத்து தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்து விடலாம். எனினும், ஒரு சில வாரங்கள் கழித்து மருத்துவ பரிசோதனை செய்து பார்ப்பதன் மூலமாக கர்ப்பமுற்றிருப்பதை மருத்துவ ரீதியாக உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும், மாதவிலக்கு தள்ளிப்போக ஆரம்பித்த சில நாட்களிலேயே, மயக்கம், வாந்தி வருவது போன்ற எண்ணம், சோர்வு போன்றவையும் ஏற்படும். இவையும் கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு சில பெண்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் இல்லாமல், வேறுபட்டு மாதவிலக்கு ஏற்படும் போது, அவர்களுக்கு இதை மட்டுமே வைத்து தாய்மை அடைவதை உறுதி செய்தல் இயலாது. இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது.

இந்த பரிசோதனை என்பது, பெண்களின் சிறுநீரை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் சோதனையாகும். கருவுற்றிருக்கும் பெண்களின் சிறுநீரில் குறிப்பிட்ட சில ஹார்மோன்கள் கலந்திருக்கும். இதை வைத்தே அப்பெண் தாய்மையுற்றிருப்பதை மருத்துவர் உறுதி செய்வார்.

மேலும், வீட்டிலேயே இந்த சோதனையை நாம் செய்து கொள்ள இயலும். அதற்காக வந்திருப்பதுதான் எச்பிடி என்ற சாதனமாகும். மருந்து கடைகளில் குறைவான விலையில் இது கிடைக்கிறது. இதனை பயன்படுத்தும் முறையும் அதில் விளக்கப்பட்டிருக்கும். எனவே, திருமணமாகி சிலருக்கு திடீரென மாதவிலக்கு தள்ளிப்போகும். ஆனால், அது குழந்தைப் பேறாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அடிக்கடி மருத்துவரிடம் செல்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த சாதனத்தை வாங்கி வீட்டிலேயே பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

ஆனால், மாத விலக்கு தவறி ஒரு வார காலம் கடந்த பிறகுதான் இதில் சரியான முடிவை நாம் தெரிந்து கொள்ள முடியும். ஒரு சிலர், மாதவிலக்கு தவறி ஒரு சில நாட்களுக்குள்ளேயே இந்த பரிசோதனையை செய்யும் போது, சிலருக்கு தவறான முடிவுகள் கூட காட்டப்படலாம். மேலும், மாதவிலக்குத் தவறிய ஒரு வாரத்துக்குப் பிறகு எடுக்கும் சோதனையில், கருவுற்றிருக்கவில்லை என்று வந்தால்,  சில நாட்கள் கழித்து மீண்டும் சோதித்துப் பார்க்கலாம். அல்லது மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget