பாலிவுட் ரசிகர்களுக்கு, ஒரு இனிப்பான செய்தி. "டிரான்ஸ்பார்மர், டிரான்ஸ்பார்மர் ரிவெஞ், தி டிக்டேட்டர் போன்ற படங்களில் நடித்து, ஹாலிவுட் ரசிகர்களை, தன் அதிரடி அழகால் கிறங்கடித்த, மேகன் பாக்ஸ், விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறாராம். பாலிவுட்டின் பிரபல இயக்குனர், ராஜிவ் ஜவேரி, "பீவர் என்ற பெயரில், தன் கனவுப் படத்தை இயக்கப் போகிறார். சஸ்பென்சும், த்ரில்லரும் கலந்த, இந்த படத்தில், ஹீரோயினாக நடிப்பதற்கு, சர்வதேச
அளவில் பிரபலமான ஒரு நடிகை, அவருக்கு தேவைப்பட்டார். "மேகன் பாக்ஸ் நடித்தால், நன்றாக இருக்கும் என, நினைத்து, அவரிடமே, இதை கேட்க, அவரும்,"கால்ஷீட் இருந்தால், கண்டிப்பாக நடிக்கிறேன் என, உறுதி அளித்துள்ளாராம். பாலிவுட் படத்தில் நடிக்க, ஆர்வமாக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளாராம். எப்படியோ, மேகன் பாக்ஸ் வரவு, பாலிவுட்டில், சந்தோஷமான அதிர்வுகளை ஏற்படுத்தும் என, உறுதியாக நம்பலாம்.