பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் தொடர் பிரச்சனைகள்


மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் ஒன்று. ஆனால் கருவை சுமக்கும் பெண்ணுக்கோ மாதவிடாய் வெளிப்படுதல் நின்று விடும். ஆனால் குழந்தை பிறந்தபின் மாதவிடாய் திரும்பும் போது, பெண்கள் படும் கஷ்டங்களும் கொஞ்சம் அதிகம் தான். குழந்தைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் திரும்புதலை கட்டுப்படுத்தும் காரணிகள் பல உள்ளன. குழந்தை பெற்றவுடன் வரும் மாதவிடாயை பற்றி சில தகவல்களை ஒவ்வொரு பெண்ணும்
அறிந்து கொள்ள வேண்டும். முறையான பாதுகாப்பு எடுக்க தவறினால் தொற்று மற்றும் பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும். குழந்தை பிறந்தவுடனே இழக்கும் இரத்தத்தின் நிறம் அடர்ந்த சிவப்பில் இருக்கும். 

எப்போதும் இருக்கும் மாதவிடாயை விட இரத்த இழப்பு மிகவும் அதிகமாக இருக்கும். இந்த அடர்ந்த நிறம் சீக்கிரமே மங்கிய சிவப்பு நிறமாகும். இரத்த இழப்பும் ஒரு வார காலத்தில் நன்றாகவே குறைந்து காணப்படும். இந்த நிறம் மேலும் பழுப்பு சிவப்பாக மாறும். கடைசியாக இரத்த இழப்பு நிற்கும் முன் மஞ்சள் கலந்த வெண்ணிறமாக மாறும். 

இந்த நேரத்தில் பல பெண்கள் பேறுகால டையப்பர்களை பயன்படுத்துவார்கள். அடைப்புபஞ்சுருண்டை பயன்படுத்துவதை விட சானிட்டரி பேட் (sanitary pad) பயன்படுத்துவதே சிறந்தது. மேலும் குழந்தை பிறந்து 6 வாரங்களுக்கு, இந்த இரத்தக் கசிவு இருப்பதால், ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். 

இதனால் பெண்களுக்கு புத்துணர்ச்சியும், தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும். இரத்தக் கசிவு நின்ற பின், தூய்மைக்கு கேடு விளைவிக்கும் அதிகமான நாற்றம் மற்றும் சிறிதளவு இரத்தக் கசிவும் ஏற்படும். இது குழந்தை பிறந்த நேரம் நடந்தால் இயல்பானதே. 

ஆனால் தொடர்ந்து இரத்த வெளியேறுதல் அல்லது பெரிய இரத்த உறைக்கட்டி அல்லது தூய்மைக்கு கேடு விளைவிக்கும் வாடையோ அல்லது அடர்த்தியான சிவப்பு நிறத்தில் இரத்தக் கசிவு ஏற்பட்டாலோ, உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது. 

குழந்தைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் திரும்புதல், அந்த பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாளா இல்லையா என்பதை பொறுத்தே உள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு மாதவிடாய் 10 வாரங்களில் திரும்பிவிடும். 

ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, இது இன்னும் சில காலம் தள்ளிப் போகும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் திரும்ப 20 வாரமாவது ஆகும். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget