தற்போது இளையதலைமுறையினர் அனைவரும் விதவிதமான வாட்ச் அணிய விரும்பம் உள்ளவர்களாக உள்ளனர். அதுவும் பெண்கள் சேலை, சுடிதார், பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர். லெதர், மெட்டல், கோல்ட் என பல மாடல்கள் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாமே தினமும் உபயோகிப்பதில்லை. சில வாட்ச்கள் பீரோவில் தூங்கும்.
அப்படி ரொம்பநாள் கழித்து எடுத்து பார்க்கும் போது பேட்டரி போய் விடும். இல்லை கருத்துவிடும். நிறைய நாட்கள் உபயோகிக்காமல் வைத்திருக்கும் வாட்சின் பேட்டரி போகாமல் இருக்க வாட்சில் டைம் செட் செய்யும் ஸ்க்ரு இருக்கும்.
அதை லேசாக இழுத்து விட்டால் மணி ஓடாமல் நின்றுவிடும். அப்படியே பீரோவில் வைத்து விட்டு பின்னர் நாம் எடுத்து பயன்படுத்தும் போது அந்த ஸ்க்ரூவை அழுத்தி விட்டு டைம் செட்செய்து போட்டு கொள்ளலாம். இவ்வாறு செய்தால் வாட்ச் நிறைய நாட்கள் பழுதாகாமல் இருக்கும்.
செண்ட் போன்ற வாசனை திரவியங்கள் வாட்சில் பட்டால் கருத்து வெளுத்து போய்விடும். எனவே வாட்சை எல்லா பொருட்களுடனும் போட்டு வைக்காமல் தனியாக அதற்குறிய பாக்ஸிலோ அல்லது டிஷு பேப்பரில் சுருட்டியோ வைத்தால் கருக்காமல் ரொம்ப நாட்களுக்கு நன்றாக இருக்கும்.