மொபைல் பேட்டரியை எளிதாக பராமரிப்பது எப்படி


நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமது மொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடிய எரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. நாம் ஒழுங்காக பேட்டரியை பராமரித்தால் நிச்சயம் இந்த பிரச்சனை நம் மொபைலுக்கு வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் கீழே
காணலாம்.....

பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும். பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும்.

மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். டூப்ளிகேட் பேட்டரி உங்கள் போனை பாதிக்கும்.

ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.

நாம் தொடர்ச்சியாக மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது இதனால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கலாம்.

சார்ஜ் செய்வதனால் பேட்டரியின் அளவு குறைகிறதா? உடனே எடுத்துச் சென்று போன் டீலரிடம் தரவும்.அடிக்கடி பேட்டரியை மொபைலில் இருந்து கழட்டாதீர்.

முக்கியமாக பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை கூட ஏற்படலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget