பவரான சட்டத்தில் கைதாகும் பவர்ஸ்டார் சீனிவாசன்


நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கோர்ட்டு அனுமதியுடன் அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆந்திர தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.20 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.
பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் செய்துள்ளார்கள். 

சீனிவாசன், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி வக்கீல்களையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதன் தனது கட்டுமான தொழிலை அபிவிருத்தி செய்ய பவர் ஸ்டாரின் உதவியை நாடினார். அப்போது பவர் ஸ்டார் சீனிவாசனிடம் ரூ.2 கோடி கடன் கேட்டுள்ளார். அவர் அதற்கு கமிஷனாக ரூ.70 லட்சத்தை முன் கூட்டியே வாங்கி கொண்டார். ஆனால் வேலைகள் எதுவும் சொன்னபடி செய்து கொடுக்கவில்லை. 

இதுபற்றி ஜெகநாதன் போலீசில் புகார் செய்தார். இதேபோல் சண்டிகாரை சேர்ந்த ஜெகன்சிங் என்பவரிடம் ரூ.2 கோடி, கோவாவை சேர்ந்த பிரகாஷ் ரத்தோரிடம் ரூ.16.5 லட்சம் என்று பலரிடம் ஏமாற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். 

இதன் அடிப்படையில் புதிதாக மேலும் 3 வழக்குகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனிவாசன் கமிஷனாக பெற்ற பணத்தில் அண்ணா நகர் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கி குவித்துள்ளார். மொத்தம் ரூ.150 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்து பினாமிகள் பெயரில் வைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது என்பது பற்றி போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். அண்ணாநகர், சாலி கிராமம் ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பவர் ஸ்டார் சீனிவாசன் கணக்கு வைத்துள்ளார். போலீசார் அந்த வங்கிகளில் சீனிவாசனின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர். 

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையில் போலீஸ் விசாரணையின் போது பேராசைப்பட்டு இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு விட்டேன் எனது சொத்துக்களை விற்று கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்சி உள்ளார். 

திருமங்கலத்தில் உள்ள அவரது ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவர்கள் ஆஸ்பத்திரியை மூடிவிட்டு சென்று விட்டார்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget