சூர்யாவின் சிங்கம் படம் ஹிட்டானதால் அதன் இரண்டாம் பாகம் 'சிங்கம்-2' என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா, நடித்துள்ளனர். காமெடி வேடத்தில் விவேக், சந்தானம் வருகிறார்கள். அஞ்சலி இப்படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடி உள்ளார்.
இப்பாடல் காட்சி தூத்துக்குடியில் பட மாக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து டப்பிங் ரீரிக்கார்டிங் பணிகள் நடந்து வருகின்றன. படம் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி படத்தை வெளியிட திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழா ஜூன் 1-ல் நடக்கிறது. சிங்கம்-2 படம் தெலுங்கில் யாமுடு-2 என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. தமிழில் சிங்கம்-2 வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர்.