ஐ.டி பெண்களின் விபரீத ஆசை

சமீபத்திய உலகப் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த செல்வி தற்போது தன் மகப்பேறை உறுதி செய்யும் பரிசோதனை முடிவிற்காக ஆவலுடன் ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறார். ஆனால், அது வழக்கமாக தாய்மைக்கான ஆவல் அல்ல. குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதிக்காக வாடகைத் தாயாகி இருக்கிறார் செல்வி. 

அந்த சேவைக்காக கிடைக்கப்போகும் இரண்டு லட்ச ரூபாய் தான் அந்த ஆவலின் மையப்புள்ளி. அதைக் கொண்டு தான் வாங்கியிருக்கும் வங்கிக் கடன்களின் மாதத் தவணைகளை செட்டில் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம்.  செல்வி மட்டுமல்ல இந்த பொருளாதார நெருக்கடியால் ஐ.டி துறையில் வேலை இழந்த ஐநூறு இளம்பெண்கள் தங்களின் சுயதேவை போராட்டத்துக்காக வாடகைத் தாயாக இருக்க தயாராகிவிட்டார்கள். 

இதற்காக சென்னையிலுள்ள குழந்தைபேறு மையத்துடன் ரகசிய உடன்பாடு வைத்திருக்கிறார்கள். இவர்கள் உடனான தொடர்பு ரகசியமாக கையாளப்படுகிறது.  கருமுட்டை தானத்திற்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரையிலும், வாடகைத்தாய் சேவைக்கு இரண்டு முதல் மூன்றரை லட்சம் வரையிலும் கிடைக்கிறது.

ஐ.டி துறையில் மட்டுமல்ல திருப்பூர், கரூர் இப்படி டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிகள் அதிகமுள்ள பகுதியில் இருந்தும் வாடகை தாயாக பெண்கள் வருகிறார்கள் என அதிர்ச்சியூட்டும் செய்தி. 

வாடகைத்தாய்.......... வாடகைத்தாய் முறையில் குழந்தைபெறும் முறை என்பது, ஒரு குழந்தையைச் சுமக்க இயலாத உடல்நிலையிலுள்ள பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். முன்பெல்லாம் மிகுந்த தயக்கத்துக்கும், குழப்பத்துக்கும் பிறகு வாடகைத்தாயாக இருக்க சம்மதிப்பார்கள் பெண்கள். 

அதுவும் அவர்கள் குடும்பத்தில் முக்கியமான ஏதாவது ஒரு பண நெருக்கடிக்காத்தான் சம்மதிப்பார்கள். இப்போது ஒரு முறை வாடகைத் தாயாக இருந்தவர்கள் தங்கள் தோழிகளிடமும், உறவு பெண்களிடமும் இந்த முறை பற்றியும், இதன் வழியாக கிடைக்கும் பணம் பற்றியும் கூறுவதால், இப்போது தானாகவே பெண்கள் முன்வருவது அதிகரித்துள்ளது. 

தங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், வீடு கட்டவும் தேவைப்படும் பணத்தைப் பெற வாடகை தாயாக இருப்பதில் சந்தோசப்படுகின்றனர் பெண்கள் என்பது மருத்துவ வட்டாரத்தில் சொல்லும் விநோத தகவல். 

புண்ணியசெயல்........ இவையெல்லாம் உண்மைதானா? மகப்பேறு மருத்துவத்தில் அனுபவம் பெற்ற மருத்துவர் ஜெயராணியிடம் பேசினோம். கரு உருவாவதற்கு பெண்ணின் கருமுட்டை முதல் அவசியத் தேவை. சில பெண்களுக்கு கருமுட்டை உருவாவதில் சிக்கல்கள் இருக்கலாம். அத்தகைய பெண்கள் கர்ப்பமாவதற்குதான் ஆரோக்கியமான வேறொரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானம் பெறுவோம். 

கருமுட்டை தானத்தையும் எல்லா பெண்களிடமிருந்தும் நாங்கள் பெறுவதில்லை. அவர்களுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அந்தப் பெண்ணின் வயது 30க்குள் இருக்க வேண்டும். கருமுட்டை தானம் தர அந்த பெண்ணின் கணவர் சம்மதிக்க வேண்டும். 

இந்த விதிகளுக்கு எல்லாம் உட்பட்டு வரும் பெண்களிடமிருந்து தான் நாங்கள் கருமுட்டை பெறுகிறோம் என்றவர், முன்பெல்லாம் வாடகைத்தாய்க்கும், கருமூட்டை தானத்திற்கும் கோவை மாவட்ட பகுதியிலிருந்து பெண்கள் வருவார்கள். அவர்களை அழைத்து வர பிரத்யோக ஏஜெண்டுகள் கூட உண்டு. 

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். ஆஸ்பத்திரிக்கு போன் செய்து `வீட்ல சும்மாத்தான் இருக்கேன்' என்று கேட்டு போன் செய்யும் பெண்கள் ஏராளம். கருமுட்டை தானதாக கொடுப்பதும், வாடகை தாயாக இருப்பதும் சாமான்யமான விஷயங்கள் அல்ல. மிகவும் புண்ணியமான செயல். எனக்கு தெரிந்து பெண் ஒருவர் ஐ.டி துறையில் பணிபுரிகிறார் திருமணமாகி ஒன்றைரை ஆண்டுகள் ஆகிறது. 

குழந்தை இல்லை. குழந்தையின் படிப்பு எதிர்காலத்திற்கென சம்பாதித்து கொண்டு குழந்தை பெறலாம் என்பது அந்த தம்பதியரின் திட்டம். அந்த பெண்ணிடம் என்னிடம் கேட்டாள் நான் வாடகைத்தாயாக இருக்க முடியுமா? அதில் கிடைக்கம் சில லட்சங்கள் வழியாக எங்கள் எதிர்காலத்தை நல்ல முறையில் திட்டமிடலாமே என்று யதார்மாக சொல்கிறார். 

ஒன்று அல்லது இரண்டு முறை தாயாக இருந்துவிட்டு வாடகை தாயாகலாம் என்பது அவர்களின் திட்டமாக உள்ளது. ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருமணம் ஆகாத இளம் பெண்கள் பலரும் வாடகைதாயாக முன் வருகிறார்கள். 

இந்த சிகிச்சையால் உடம்பில் வெளியே தழும்பு தெரியுமா? எவ்வளவு பணம் கிடைக்கும்? என்று ஏதோ கத்திரிக்காய் வியாபாரம் போல் நேரில் வந்து விசாரிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நாங்கள் சொல்லும் பதில் `நோ' என்கிறார் ஜெயராணி. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget