ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 2

நுண்ணறிவு

*  நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை எனக் கூறப்படும் ஆல்பிரட் பினே என்பவர் புரிந்து கொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய செயலைத் தொடர்ந்து முடித்தல், தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் போன்ற கூறுகள் நிண்ணறிவினுள் அடங்கியுள்ளன என்றார்.
*  நோக்த்தோடு செயல்படுதல், பகுத்தரிவோடு சிந்தித்தல், திறமையாகச் சூழ்நிலையைச் சமாளித்தல் போன்றவை அடங்கிய !ரு கூட்டுச் செயலாற்றலே நுண்ணறிவு என்று வெக்ஸ்லர் கூறுகிறார்.

*  தார்ன்டைக் என்பவர் கூற்றின் படி நுண்ணறிவு மூன்று வகைப்படுகிறது.

*  1.சமூக நுண்ணறிவு: பிறரைத் தன்பால் ஈர்க்கும் திறன் கொண்டு சமூகத்துடன் இணைந்து வாழ்தல் சமூக நுண்ணறிவு எனப்படும்.

*  2.கருத்தியல் நுண்ணறிவு: பல்வேறு குறியீடுகள், சொற்கள் வரைபடம், எண்கள் ஆகியற்றுக்கிடையேயான தொடர்பினை அறிந்து பிரச்சனைக்குத் தீர்வு காணுதல் கருத்தியல் நுண்ணறிவு எனப்படுகிறது.

*  3.பொறியியல் சார்ந்த நுண்ணறிவு: பல்வேறு இயந்திரங்களை வடிவமைத்துத் திறமையாகக் கையாளும் திறனைப் பெற்றுத் திகழ்வதே பொறியியல் சார்ந்த நுண்ணறிவு எனப்படுகிறது.

*  நுண்ணறிவு என்பது புரிந்துகொள்ளும் ஆற்றல், சிக்கலைத் தீர்க்கும் ஆற்றல், தொடர்பு காணும் ஆற்றல், சூழ்நிலைப் பொருத்தப்பட, கருத்தியல் சிந்தனைத் திறன் போன்ற ஆற்றல்கள் அல்லது திறன்களின் தொகுப்பாகும்.

நுண்ணறிவு கோட்பாடுகள்:

*  மூன்று வகை நுண்ணறிவுக் கோட்பாடுகள் கூறப்பட்டுள்ளன. அவை ஒற்றைக் காரணி, இரட்டைக் காரணி, குழுக்காரணி என மூவகைப்படும்.


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget