இயக்குனர் பாலசந்தர் அறிமுகத்தில் நாடிகரான விவேக்குக்கு இன்றளவும் ஒரு குறை உள்ளதென்றால் அது உலக நாயகன் கமலின் படத்தில் நடிக்காதது தான். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்தாலும் கமலுடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட காலம் காத்திருந்தவருக்கு, அவரின் ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது.
நடிப்பதோடு, கன்னடத்தில் படங்களையும் இயக்கியவர் ரமேஷ் அரவிந்த். அவர் தற்போது கமலை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
அந்தப் படத்தில் கமலுடன் விவேக்கும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கமலுடன் நடிக்க ஏன் இவ்வளவு தாமதம்..? அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சிணையா..? என்று கேட்டால் ’தெரியலையேப்பா...’ என சிவாஜி ஸ்டைலில் சிரிக்கிறார் விவேக்.