விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்டு இயங்கும் கம்ப்யூட்டர்களில், தொடுதிரை உள்ளவையும், அது இல்லாதவையும் உள்ளன. இதனைப் பயன்படுத்த தொடுதிரை முழுமையான வசதியைக் கொடுத்தாலும், அவ்வகை திரை இல்லாத மானிட்டர்களுக்குப் பதிலாக, மற்ற மானிட்டர்கள் இருந்தாலும், அல்லது தொடு திரை மானிட்டர்களிலும், நாம் கீ போர்ட் மற்றும் மவுஸ் கொண்டு இந்த சிஸ்டத்தினை இயக்கலாம்.
அடிக்கடி பயன்படுத்தும் சில குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு இந்த மூன்று வகைகளில் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதனை இங்கு காணலாம்.
1. ஸ்டார்ட் மெனு (Start Menu):
தொடுதிரை: சார்ம்ஸ் பார் திறந்து ஸ்டார்ட் என்பதில் தொட்டு தட்டவும்.
மவுஸ்: திரையின் இடது மூலையில், மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். ஸ்டார்ட் மெனுகிடைக்கும்.
கீ போர்ட்: விண்டோஸ் கீயினை அழுத்தவும்.
2. சார்ம்ஸ் பார் (Charms Bar):
தொடுதிரை: திரையின் வலது மூலையில் இருந்து விரல்களால் ஸ்வைப் செய்திடவும். ஒருமுறை இழுத்துவிடவும்.
மவுஸ்: விண்டோஸ் 8 இடைமுகத்தின் மேல் அல்லது கீழ் வலது மூலையில் மவுஸைக் கொண்டு சென்று சற்று சுழற்றவும்.
கீ போர்ட்: விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே C கீயை அழுத்தவும்.
3. ஸூம் செய்தல்/ குறைத்தல் (Zoom In/Out):
தொடுதிரை: இரண்டு விரல்களை நெருக்கமாக திரையில் வைத்து, பின் விரிக்கவும். தொடர்புள்ள காட்சி விரிவடையும். இதே போல இரு விரல்களை விரித்து வைத்தவாறே, சுருக்கினால், காட்சி ஸும் ஆனது குறையும்.
மவுஸ் மற்றும் கீ போர்ட்: கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே, மவுஸின் ஸ்குரோல் வீலை முன்புறமாக அழுத்தினால், காட்சி விரிவடையும். பின்புறமாக இழுத்தால், சுருங்கும். சில அப்ளிகேஷன்களில், இது நேர் மாறாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது இந்த செயல்பாடு இல்லாமலே இருக்கலாம்.
4. ஆப்ஷன்ஸ் மெனு (Options Menu):
தொடுதிரை: திரையின் கீழிருந்து மேல் நோக்கி விரலால் தொட்டு இழுக்கவும்.
மவுஸ்: அப்ளிகேஷன் ஒன்றினுள், காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.
கீ போர்ட்: விண்டோஸ் கீயினை அழுத்திக் கொண்டு Z கீயை அழுத்தவும்.
5. அப்ளிகேஷன் ஸ்விட்சர் (App Switcher):
தொடுதிரை: திரையின் இடது மூலையிலிருந்து தொட்டு இழுக்கவும்.
மவுஸ்: கர்சரை மேல் இடது மூலையில் இருந்து மத்தியில் கீழாக இடது மூலையை நோக்கி இழுக்கவும்.
கீ போர்ட்: விண்டோஸ் கீயினை அழுத்திக் கொண்டு கூச்ஞ கீயை அழுத்தவும். டேப் கீயை அடுத்தடுத்து தட்ட, அப்ளிகேஷன் அடுத்தடுத்து இயக்கத்திற்குத் தயாராய் காட்டப்படும்.
6. அப்ளிகேஷன்களை மூட (Close Apps):
தொடுதிரை: திரையின் மேல் பகுதியில் விரலால் அழுத்தியவாறே, கீழாக கீழ் நோக்கி இழுக்கவும். அப்ளிகேஷன் சுருங்கி மறைவதனைக் காணலாம்.
மவுஸ்: இடது பட்டனை திரையின் மேல் முனையில் அழுத்திக் கொண்டு, கீழாக அப்ளிகேஷன் சுருங்கி மறையும் வரை இழுக்கவும்.
கீ போர்ட்: Alt கீயை அழுத்திக் கொண்டு எப் 4 கீயை அழுத்தவும்.
பின்குறிப்பு: விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் முழு பயனை அனுபவிக்க, தொடுதிரை மானிட்டர் வாங்குவதாக இருந்தால், அந்த மானிட்டரின் திரை கெபாசிட்டிவ் மல்ட்டி டச் (capacitive multitouch display) டிஸ்பிளே கொண்டதாக வகைப்படுத்தப் பட்டுள்ளதா எனப் பார்த்து வாங்கவும். இரண்டுக்கு மேற்பட்ட விரல்களைப் பயன்படுத்தி இயக்கும் வசதியை ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் திரைகள் தராது. இதனால், முழுமையான விண்டோஸ் 8 அனுபவம் கிடைக்காது.