மீண்டும் மலையாளத்தில் ஜொலிப்பாரா பிரியாமணி

தமிழ், தெலுங்கு படவுலகம் கைவிட்ட போது ப்ரியாமணிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது மலையாள படவுலகம். இரு பெரிய படவுலகில் கிடைக்காத பல நல்ல கதாபாத்திரங்கள் மலையாளத்தில் அவருக்கு கிடைத்தன. பிருத்விராஜுடனும் நடித்தார். ஒரு படத்தில் பிருத்வி போலீஸ், பிரியாமணி ஜர்னலிஸ்ட்.

கொஞ்ச காலம் மலையாளத்தில் வாய்ப்பு இல்லாமலிருந்த பிரியாமணிக்கு பெரிய வாய்ப்பு
ஒன்று கிடைத்திருக்கிறது. பைஜு இயக்கும் பெயின்டிங் லைஃப் படத்தில் பிரியாமணி நடிக்கிறார்.

இந்தோ - திபெத் எல்லையில் படப்பிடிப்புக்காக ஒரு டீம் செல்கிறது. படத்தின் இயக்குனர் பிருத்விராஜ் எதிர்பாராதவிதமாக....

இயற்கை சீற்றத்தால் அவர்கள் அங்கே மாட்டிக் கொள்கிறார்கள். அந்த இக்கட்டான சூழலில் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை அவர்கள் அனுபவப்பட நேர்கிறது.

விருதுகள் பல வாங்கியவர் இயக்குனர் பைஜு. அவாரின் இந்தக் கதையில் நடிக்க பலரும் ஆர்வம் கொண்ட நிலையில் பிரியாமணியை வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

பெயின்டிங் லைஃப் பல விருதுகளை கைப்பற்றும் என்பதை அதன் கதையே சொல்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget