ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற விவகாரம் கொஞ்ச காலமாகவே கோலிவுட்டில் எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விஜய் வட்டாரம் அவ்வப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கூறி வருகின்றனர். தலைவா படத்தின் ஆடியோ விழாவில்கூட அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றே மேடையில் பேசினார்கள். அதையடுத்து, இப்போது சிங்கம்-2 படத்தின்
பிரஸ்மீட்டில் அப்படத்தில் நடித்த நடிகர்கள் பேசுகையில், அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே விஜய்தரப்பு சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக முன்மொழிந்து கொண்டிருக்க, இப்போது சூர்யாதரப்பும் போட்டிக்கோதாவில் குதித்திருப்பதால் கோலிவுட்டில் புதிய பரபரப்பு நிலவி வருகிறது.
அதோடு, விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை சூட்டுவதற்கான கால நேரத்தை எதிர்நோக்கியுள்ள அவரது அபிமானிகள் இந்த திடீர் பிரச்னையினால் குழம்பிப் போயிருக்கின்றனர்.