சிம்புவின் காதலை எதிர்க்க மாட்டேன் - டி.ஆர்

சிம்பு யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். மன்மதன், வல்லவன், கெட்டவன் என்று வலம் வந்த சிம்பு இப்போது என்னடான்னா இமயமலை, காசி என ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது அப்பாவோ இப்போதும் யங் ஸ்டார் மாதிரி இளம் நடிகைகள் உடன் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு
ராம.நாராயணனின் இயக்கத்தில் ஆர்யா சூர்யா என்ற படத்தில், கவர்ச்சி நடிகை மும்மைத்கான் உடன் ‘‘தகடு த‌கடு மந்திரிக்க வாடி...’’ என்ற பாடலுக்கு செம்மையாக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். டி.ஆரின் ஆட்டத்தை பார்த்து மும்மைத்கான் மட்டுமல்ல ஆர்யா சூர்யா பட யூனிட்டே வாயடைத்து போய் இருக்கிறது. அந்தளவுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் அதுவும் யூத்பூல்லாக. 

எப்படி இந்தளவுக்கு உங்களால் ஆட முடிகிறது என்று டி.ஆரிடம் கேட்டால், எனக்கு சிவன் அருள் இருக்கிறது. அவரது அருளால் இந்த தாடி ஆடுகிறான் என்று கூறுகிறார். தனது மகனின் திருமணம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது எனது மகளுக்கு திருமணத்திற்கான நேரம் கூடி வந்துள்ளது. அவளது திருமணம் முடிந்ததும் சிம்புவின் திருமணம் நடக்கும். சிம்பு காதலிப்பதாக கூறுகிறார்கள். அவர் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆறு வகை..!!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget