இராவண தேசம் சினிமா விமர்சனம்

நடிகர் : அஜெய்
நடிகை : ஜெனீபர்
இயக்குனர் : அஜய் நூத்தக்கி
இசை : ஆர்.சிவன்
ஓளிப்பதிவு : வி.கே.ராம்ராஜ்
தனி ஈழம் வேண்டும் என்று போராடிய ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இலங்கை ராணுவத்தின் பாதக செயலை அப்பட்டமாக காட்டும் படம்தான் ராணுவ தேசம். பிரபாகரன் இறப்புக்கு பிறகு இலங்கை ராணுவத்தினரிடம் இருந்து தப்பித்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் நடுக்கடலில் தத்தளித்து, அவதிப்பட்டு மாண்ட கதையை தோலுரித்து காட்டியுள்ளது இப்படம்.
இலங்கையின் ஒரு கிராமத்தில் வாழும் நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இருவரின் விருப்பப்படியே அவர்களுக்கு திருமணமும் நடக்கிறது. இந்நிலையில், போரின்போது இலங்கை ராணுவம் அங்கு அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதில், அந்த ஊரில் வாழ்ந்த ஏராளமானோர் மடிந்து போகின்றனர்.
மீதமிருக்கும் நாயகன்-நாயகி மற்றும் ஊரில் சிலரும் சேர்ந்து இலங்கையிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிடுகின்றனர். அதன்படி யாருக்கும் தெரியாமல் ஒரு படகில் ஏறி இந்தியாவுக்கு பயணமாகின்றனர்.
இந்தியாவை நெருங்கும் வேளையில் ரோந்து கப்பல் கண்ணில் தெரியவே, அனைவரும் பயந்து படகிற்குள் தஞ்சம் அடைகின்றனர். நெடுந்தூரப் பயணத்தால் களைப்படையும் அனைவரும் படகுக்குள்ளேயே அயர்ந்து தூங்கி விடுகின்றனர். விழித்துப் பார்த்தால் படகு வேறு ஒரு திசை நோக்கி நகர்ந்து உள்ளது தெரியவருகிறது.
நடுக்கடலில் திசை தெரியாமல் விழிக்கும் அவர்கள் இறுதியில் இந்தியாவுக்குள் பாதுகாப்பாக நுழைந்தார்களா? அவர்கள் கதி என்னவாயிற்று என்பதை மனதை உலுக்கும் காட்சிகளால் படமாக்கியிருக்கிறார்கள்.
நாயகன் அஜெய் படம் முழுக்க தாடியுடன் வலம் வந்திருக்கிறார். இலங்கைத் தமிழராக இவர் துடித்து எழும் காட்சிகள் அருமை. இறுதிக்காட்சியில் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ‘நாங்களும் மனுஷங்கதாண்டா…. எங்களையும் வாழவிடுங்கடா…’ என்று கதறியழும் காட்சியில் கண்களில் நீரை வரவழைத்திருக்கிறார்.
நாயகி ஜெனீபர் பாவாடை சட்டையில் இலங்கை பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகனுடன் காதல் செய்யும் காட்சியில் பளிச்சிடுகிறார். நடுவழியில் எங்கு செல்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது இந்தியாவுக்கு சென்ற தன் மகனை பார்க்க சென்றுவிடுவோமா என்ற ஏக்கத்திலேயே உயிரை விடும் வேலுப்பிள்ளை கதாபாத்திரத்தில் வரும் கொண்டாவும் அவரது மனைவியும் அழகாக நடித்திருக்கிறார்கள்.
பிரபாகரன் வேடத்தில் நடித்திருப்பவர் கொஞ்ச நேரமே வந்தாலும் அனல் பறக்கும் வசனத்தால் கவர்ந்திழுக்கிறார். பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படவில்லை. தன் இறப்பு தனி ஈழத்துக்கு வழிவகுக்கட்டும் என்று கூறி தன் இனமக்களால் சுடப்பட்டு இறந்தார் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டியதற்காக இயக்குனர் அஜய் நூத்தக்கியை பாராட்டலாம். நிறைய காட்சிகள் நெஞ்சை வருடும் விதமாக எடுத்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகளின் நீளம் அதிகமாக இருப்பதால் பார்ப்பதற்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது.
வி.கே.ராம்ராஜ் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். கடலில் ஏற்படும் சூறாவளியை கிராபிக்ஸ் காட்சிகளால் அமைத்தது அருமை. ஆர்.சிவன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையும் பரவாயில்லை.
மொத்தத்தில் ‘இராவண தேசம்’ தென்றல் வீசும்
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget