ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2014

2014-ம் ஆண்டு இனிய ஆங்கில புத்தாண்டு, 1.1.2014 அன்று, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லக்கூடிய பொன்னான தினமான புதன்கிழமை அன்று தனுசு ராசி, கன்னி லக்கினம், மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டு, நாட்டுமக்களுக்கு நன்மைகளை தரும்.
புத்தாண்டின் லக்கினத்தில் 3-8-க்குரிய செவ்வாய்.
தனஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனியுடன் ராகு.
சுகஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன்.
5-ம் இடத்தில் சுக்கிரன். அஷ்டமத்தில் கேது. 10-ல் குரு.
இதில் என்ன விசேஷம் என்றால், 4-ம் இடத்தில் வீற்றிருக்கும் சந்திரனை குரு பார்ப்பதால், “கெஜகேசரி யோகம்”மும், செவ்வாய் 4-ம் பார்வையாக பார்வை செய்வதால், “சந்திரமங்கள யோகம்”மும். சூரியனும், புதனும் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்”மும் கொடுக்கிறார்கள். இவ்வாறாக பல யோகங்களுடன் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு பொன், பொருளை வாரி வழங்கும். கல்விதுறைக்கு பெரும் முன்னேற்றம் கொடுக்கும். சனி, கேதுவை பார்வை செய்வதால், அன்னிய நாட்டவர் தரும் பிரச்னைகள் அடங்கிவிடும். 4-7க்குரிய கேந்திராதிபதி குரு, 10-ல் இருப்பதால் தன-தான்ய விருத்தி, பொருளாதார வளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
பஞ்சமத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன்யின் அமைப்பால் கலைத்துறையில், கலை சம்மந்தப்பட்ட பொருட்கள் லாபம் ஈட்டும். 2-9- க்குரிய சுக்கிரன், 5-ல் இருப்பது பெரும் யோகம். பெண்களின் சாதனை தொடரும். தண்ணீர் பிரச்சனை தீரும். 8-ல் கேது வீற்றிருப்பதால், சில இடங்களில் நோய் நொடிகள் வாட்டி வதைக்கலாம். ஆனால் 2014-ம் ஆண்டின் கூட்டு எண் (2+0+1+4=7) 7 ஆக வருவதால், அதாவது கேது ஆதிக்க எண்ணாக வருவதால் தெய்வ வழிபாடு அதிகமாக காணப்படும்.
இந்த தெய்வ வழிபாட்டின் பலனாக மக்களை வாட்டும் நோய் நொடிகளும் தீரும். கன்னி செவ்வாய் கடலும் வற்றும் என கூறுவார்கள். கடல் வழியாக தேவை இல்லா பிரச்னை வரலாம். அவை அரசாங்கத்தின் முயற்சியால் தடுக்கப்படலாம்.
பொதுவாக 2014-ம் ஆண்டு அருமையான, பெருமையான ஆண்டாக அமையும்.
இந்த புத்தாண்டு புதன்கிழமையில் பிறப்பதால், காலையில் முதலில் விநாயகரையும் அடுத்து பெருமாளையும் மனதால் நினைத்து வணங்க வேண்டும். இதனால் இறைவனின் ஆசியால் ஆண்டு முழுவதும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
புத்தாண்டு அன்று உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அத்துடன் முதல் முதலில் வாங்கும் பொருள் சர்க்கரையாக இருந்தால் நல்லது. காரணம் இனிப்பு தெய்வ வழிபாடுக்கு விசேஷமானது. அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் கிடைக்கும்.
உங்கள் பிராத்தனை அனைத்தும் இந்த 2014-ம் ஆங்கில புத்தாண்டு வருடத்தில் நிறைவேறும். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுங்கள்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இனி ஒவ்வோரு இராசி அன்பர்களின் 2014-ம் ஆண்டு பலன்களை பார்ப்போம்
பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !
1-mesha-rasi2-rishaba-rasi3-mithuna-rasi
4-Kadaga-rasi5-simma-rasi6-kanni-rasi
7-thula-rasi8-viruchiga-rasi9-danusu-rasi
10-makara-rasi11-kumba-rasi12-meena-rasi

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget