நடிகர் : அஷோக் செல்வன்
நடிகை : சஞ்சிதா ஷெட்டி
இயக்குனர் : தீபன் சக்கரவர்த்தி
இசை : சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு : தீபக் குமார் பாதி
நடிகை : சஞ்சிதா ஷெட்டி
இயக்குனர் : தீபன் சக்கரவர்த்தி
இசை : சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு : தீபக் குமார் பாதி
க்ரைம் நாவல் எழுத்தாளராக வருகிறார் ஹீரோ அசோக் செல்வன். அவரது அப்பா நாசர். இவர் தன் மகனிடம் பிஸினஸ் செய்யும்படி வலியுறுத்துகிறார். முதலில் மறுக்கும் ஹீரோ, பின்னர் வேண்டா வெறுப்புடன் பிஸினசை தொடங்குகிறார். தொழிலுக்கு வழிகாட்டிய‘ நாசர் இறந்து விட, அதேசமயம் பிஸினசிலும் நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டத்தை சமாளிக்க சொத்துக்களை இழக்கிறார் ஹீரோ.
அப்போது அவருடைய வக்கீல் ஒருவர், ‘உங்க அப்பாவுக்கு பாண்டிச்சேரியில் ஒரு பங்களா இருக்கு, அதோட மதிப்பு இப்போ பல கோடி போகும்’ என்று கூறுகிறார். அதைக் கேட்ட ஹீரோ அந்த பங்களாவை விற்றால் தன்னுடைய நஷ்டத்தை சமாளித்து விடலாம் என்று எண்ணுகிறார். உடனே அவர் அந்த வில்லாவைப் (பங்களா) பார்க்க போகிறார்.
அந்த வீட்டில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை அவர் பார்க்கிறார். அது ஒவ்வொன்றும் பின்னால் நடக்கிற விஷயத்தை முன்கூட்டியே எச்சரிக்கக்கூடிய வகையில் இருந்தன. அதில் உள்ளபடியே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் ஹீரோ அந்த வீட்டில் பல இன்னல்களை சந்திக்கிறார். தொடர்ந்து அவர் சந்திக்கும் திகிலான சம்பவங்களில் இருந்து மீண்டு அந்த வீட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவாரா? என்பதே மீதிக்கதை.
படத்தின் முதல் பாதி சஸ்பென்சாக நகருகிறது. இரண்டாவது பாதி சஸ்பென்ஸ், திகில் இரண்டும் கலந்து நகருகிறது. அந்த பங்களாவுக்கு போகும் யாரும் உயிருடன் திரும்ப முடியாது என்பதைச் சொல்கிறது முழு படமும். பீட்சா படத்தை விட இந்தப் படத்தில் அதிக ஒலி அமைப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது படத்தை இன்னும் பிரமாண்டப்படுத்துகிறது.
ஹீரோ அசோக் செல்வன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சூது கவ்வும் படத்தில் நான்கைந்து பேரில் ஒருவராக வந்தவருக்கு இந்தப் படத்தின் மூலம் நல்ல வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கலாம். கேரக்டருக்கு என்ன தேவையோ அதை உள்வாங்கிப் பிரதிபலிக்கிறார். ஆர்ட்டிஸ்டாக வரும் கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி, அவருக்கு கொடுத்த வாய்ப்பை அழகாக செய்திருக்கிறார். ஓவியராக வரும் நாசர் நடிப்பு மிகவும் அருமை. தன் பங்குக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.
படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களுக்கு திக் திக் என வரவழைக்க காரணம் சந்தோஷ் நாராயணன் இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும்தான்.
பீட்சா பாணியில் திகிலாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீபன்.
மொத்தத்தில் ‘பீட்சா 2 வில்லா’ திகிலூட்டும் தீனி.