குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2014 - 2015

Guru-peyarchi-2014-2015திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த
குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும். ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். பங்கு சந்தை லாபகரமாக நடக்க வாய்ப்புள்ளது. நவதானியங்கள் விலை குறையும். பொன் ஆபரணங்கள் விலை ஏறும். இரும்பு, எண்ணை பொருட்கள் விலை அதிகரிக்கும். கடக குருவாக இருப்பதால், உலகில் சில பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம். பொதுவாக உச்ச குரு நன்மைகளை செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை குரு பகவான் தந்தருளுவார் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !
1-mesha-rasi2-rishaba-rasi3-mithuna-rasi
4-Kadaga-rasi5-simma-rasi6-kanni-rasi
7-thula-rasi8-viruchiga-rasi9-danusu-rasi
10-makara-rasi11-kumba-rasi12-meena-rasi

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget