லெனோவா ஏ 2010 ஸ்மார்ட்போன்

மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை எதிர்பார்ப்பவர்களுக்கென்றே, லெனோவா நிறுவனம் சில மாடல்களை
வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற மாதம் வெளியான லெனோவா ஏ 2010 மாடல், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும், அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,800.

இந்த மாடல் ஸ்மார்ட் போனில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி வசதிகள் உள்ளன. ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பரிமாணம் 131.5 x 66.5 x 9.9 மிமீ. எடை 137 கிராம். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 480 x 854 பிக்ஸெல் அடர்த்தியுடன், 4.5 அங்குல அளவில் உள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதன் சிப் செட் Mediatek MT6735M. சி.பி.யு. Quad-core 1.0 GHz Cortex-A53. இதனுடன் Mali-T720MP2 ஜி.பி.யு. இணைந்து செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதன் கேமரா 5 எம்.பி. திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைத்து கிடைக்கிறது. முன்புறக் கேமரா 2 எம்.பி. திறனுடன் உள்ளது. எம்.பி. 3, எம்.பி. 4 பிளேயர்கள், லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி தொழில் நுட்பம் இயங்குகிறது. ஹாட் ஸ்பாட் வசதியும் கிடைக்கிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், எச்.டி.எம்.எல். பிரவுசர் ஆகிய வசதிகள் உள்ளன. அக்ஸிலரோமீட்டர் சென்சார் தரப்பட்டுள்ளது. போட்டோ, விடியோ எடிட்டர்களும் டாகுமெண்ட் வியூவரும் செயல்படுகின்றன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி. கருப்பு மற்றும் வெண்மை நிறங்களில் இந்த மாடல் போன் கிடைக்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget