ஏர்டெல் 4ஜி அறியாத சில ரகசியங்கள்

மொபைல் போன் சேவையில் முன்னணியில் இயங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் 4ஜி சேவையை, இப்போது 18 மண்டலங்களில் விரிவு படுத்தியுள்ளது. இறுதியாக, இந்நிறுவனத்தின் 4ஜி சேவை மத்திய பிரதேச
மாநிலத்தில் தொடங்கியது. சட்டிஸ்காரிலும் இது தற்போது இயங்குகிறது. பார்தி ஏர்டெல் வழங்கும் FD LTE சேவை, மொபைல் போன் சேவைப் பிரிவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தால், முதல் முதலாக வழங்கப்படுவதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தூர், போபால், ரெய்பூர், ஜபல்பூர் மற்றும் குவாலியர் நகரங்களில் இந்த சேவை கிடைக்கிறது. 

4ஜி சேவை, 3ஜி கட்டணத்தில் வழங்கப்படுவது இதன் கூடுதல் சிறப்பு. U-SIM அப்கிரேட் செய்பவர்களுக்கு, 4ஜி சேவையில், 2 ஜி.பி. டேட்டா பயன்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது. 

இவை அனைத்தும் சேர்ந்து, இப்போது இந்தியாவில், ஏர்டெல் 4ஜி சேவை, 18 மண்டலங்களில் கிடைக்கிறது. ஏர்டெல், முதன் முதலாக, 2012 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் தன் 4ஜி சேவையைத் தொடங்கியது. முதன் முதலில் 4ஜி சேவையை இந்தியாவில் வழங்கியதும் ஏர்டெல் நிறுவனமே. 
புதிய 4ஜி ஸ்மார்ட் போன் வாங்குபவர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையில், 10 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குகிறது. இதற்கான கட்டணம் ரூ.249 மட்டுமே. மேலும், தொடர்ந்து ரூ.249 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, உடனடியாக 1 ஜி.பி. டேட்டா இலவசமாகக் கூடுதலாகத் தரப்படுகிறது. 
பயன்படுத்திய பின் கட்டணம் செலுத்தும் திட்டத்தில், ஏர்டெல் கட்டற்ற பயன்பாடு திட்டம் ஒன்றைத் தருகிறது. ரூ.1,199 கட்டணத்தில், 4ஜி டேட்டா, அளவற்ற அழைப்புகள், எஸ்.டி.டி. அழைப்புகள், ரோமிங் அழைப்புகளை மேற்கொள்ளலாம். முன்பணம் செலுத்தி பயன்படுத்தும் திட்டத்தில், ரூ.1,498 கட்டணத்தில், 4ஜி சேவையில், 6 ஜி.பி. டேட்டா இலவசமாகத் தரப்படுகிறது. அடுத்த 12 மாதங்களுக்கு, மாதம் ரூ.54 செலுத்தி, 1 ஜி.பி. 4ஜி டேட்டா பெறலாம். 4ஜி சேவையில், மாதத் திட்டத்தின் கீழ் ரூ.450 தொடங்கி, பல திட்டங்களை ஏர்டெல் தருகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget