தேவையானப் பொருட்கள்;
§ சுத்தம் செய்த கோழி(எலும்பு அதிகமுள்ள நெஞ்சுப் பகுதி அல்லது கோழி
Frame)-250 கிராம்
§ பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்)
§ தக்காளி – 3 (துண்டுகளாக்கவும்)
§ இஞ்சிப்பூண்டு
பேஸ்ட்- 1ஸ்பூன்
§ மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
§ உப்பு- 1ஸ்பூன்
§ மிளகுத்தூள்-
1 ஸ்பூன்
§ மல்லித் தூள்- 1/2 ஸ்பூன்
§ பெருஞ்சீரகம்(சோம்பு)- 1/2 ஸ்பூன்
§ பட்டை – 1சிறிய துண்டு
§ கிராம்பு- 3
§ தண்ணீர்- 3 கப்
§ எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்
தழை
– 2 ஸ்பூன் அளவு
|
செய்முறை:
§ ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு , பட்டை , கிராம்பு போட்டு தாளிக்கவும்.
§ சிக்கன், மீதமுள்ள வெங்காயம் மற்றும் அனைத்துப் பொருட்களையும்
போட்டு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடவும்.
§ ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பிறகு குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழையை தூவவும். சூப்
ரெடி.
இது குழந்தைகளுக்கு இருமல், சளி அதிகம் இருக்கும்போது தயாரித்துக் கொடுக்கலாம். செய்வதும் மிக எளிது.
|