சாதனை நூலகம்!


 பயன்படாத ரயில் நிலையம் ஏதாவது இருந்தால், அது, நம்ம ஊரில் பாழடைந்து, குப்பை கொட்டும் இடமாக மாறி இருக்கும். ஆனால், இங்கிலாந்தில் இப்படியொரு ரயில் நிலையம், இன்று, வித்தியாசமாய் சாதனை படைத்து வருகிறது.
இங்கிலாந்தில் நார்தம்பர்லாந்து என்ற பகுதியில், விக்டோரியா ஆலன்விக் என்ற ரயில் நிலையம் ஒன்று இருந்தது. வில்லியம் பெல் என்பவரால், 1887ல் வடிவமைக்கப்பட்டு துவக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், 1968ல் மூடப்பட்டது.
“பார்ட்டர் புக்ஸ்’ என்ற நிறுவனம், 1991ல், இங்கு, ஒரு செகண்ட் ஹேண்ட் புத்தகக் கடையை துவக்கியது.இன்று, இந்த புத்தகக் கடையில், 3 லட்சத்து, 50 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. எல்லாமே, செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள்தான். ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் உள்ள ஹால், ரயில்வே பிளாட்பாரம், பெண்கள் முதல் வகுப்பு தங்கும் அறை, ஆண்கள் முதல் வகுப்பு தங்கும் அறை, பார்சல் ஆபிஸ் என மொத்தம், ஏழு அறைகள் புத்தகங்களால் நிரப்பப்பட்டுள்ளன.
இரண்டாவது வகுப்பு பயணிகள் தங்கும் அறையில், மக்கள் வந்து பேப்பர், புத்தகங்கள் படித்து, காபி அருந்தி, குளிரை சமாளித்து, கதகதப்பு ஏற்படுத்திக் கொள்ள எரி அடுப்பும் உண்டு. இங்கு, பல அபூர்வ புத்தகங்கள் உள்ளன. உதாரணமாக, 17 ஆயிரம் டாலர் மதிப்புள்ள, இத்தாலியன் இன்வென்ஷன்ஸ் என்ற புத்தகம், பாதுகாப்பாக கண்ணாடி அலமாரிக்குள் வைக்கப்பட்டுள்ளது. படித்த புத்தகங்களை விலைக்கு கொடுத்துவிட்டு, படிக்காத, அங்குள்ள புத்தகத்தை வாங்கிச் செல்லலாம் அல்லது நேரடியாகவும் விலைக்கு வாங்கலாம். கேட்ட புத்தகம் இல்லையென்றால், வரும்போது கொடுக்கச் சொல்லி, ஆர்டர் கொடுத்துவிட்டும் வரலாம்.
கிறிஸ்துமஸ் நாள் தவிர, மற்ற அனைத்து நாட்களும், இந்த நூலகம் செயல்படும். சுற்றுலாப் பயணிகள் இதைக் காண பெருமளவில் வருகின்றனர். “பிரிட்டிஷ் லைப்ரரி ஆப் செகண்ட் ஹேண்ட் புக் ஷாப்ஸ்’ என செல்லமாக இதை அழைக்கின்றனர். செகண்ட் ஹேண்ட் புத்தகங்களைப் பொறுத்தவரை, ஐரோப்பாவின் மிகப்பெரிய கடைகளில் இதுவும் ஒன்று.
***
இந்த நூலகத்திலும் திருட்டு பயம் உண்டு. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புத்தகம், திருடப்பட்டு, ஐந்து வருடங்களுக்குப் பின், திரும்ப வந்து சேர்ந்தது. இரண்டாவது உலகப் போரின் போது,  ஒரு கட்டத்தில் நாஜி படைகள் இங்கிலாந்தை பிடித்து விடும் என்ற பரபரப்பு நிலவியது. “அப்படியெல்லாம் நடக்காது, பயப்பட வேண்டாம்’ என்ற அடிப்படையில், “கீப் காம் அண்ட் கேரி ஆன்’ என, ஒரு போஸ்டர் அன்று ஒட்டப்பட்டது. அந்த போஸ்டர், இந்த
நூலகத்தில் இன்றும் உள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget