மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்த ரிச்சா, கொஞ்சம் ரிச்சான அழகிதான். மயக்கம் என்ன படத்தில் அவரது அழகை கொஞ்சம் கசக்கி விட்டபோதும், ஒஸ்தியில் இது பெண்ணழகா இல்லை சிலையழகா என்கிற அளவுக்கு காண்பித்தார்கள். இருந்தும் எந்த பயனும் இல்லை. நடித்த இரண்டு படங்களுமே பெயிலானதால், ரிச்சாவின் அழகு, பர்பாமென்ஸ் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராயிற்று.
இதனால் கோடம்பாக்கத்திலிருந்து தோற்றுப்போன நடிகையாய் ஆந்திராவாலாக்களிடம் தஞ்சமடைந்த ரிச்சா, அங்குள்ள இளவட்ட ஹீரோக்களை வசப்படுத்தி சில படங்களை லாவகமாக கேட்ச் பண்ணினார். அப்படி அவருக்கு கிடைத்த படம்தான் மெரப்பக்காய். இந்த படம் தற்போது ஆந்திராவில் சக்கைப்போடு போடுகிறதாம். அதோடு ரிச்சாவின் அதிரடி கவர்ச்சியில் அஙகுள்ள இளவட்ட ரசிகர்கள் கிறங்கடிக்கப்பட்டிருக்கிறார்களாம். அதனால் தமிழைப்போலவே ரிச்சாவைக்கண்டாலே ஒதுங்கிச்சென்ற படாதிபதிகள்கூட இப்போது பக்குவமாய் பேசத் தொடங்கியிருக்கிறார்களாம். விளைவு, ரிச்சாவின் கால்சீட் டைரி வேகமாக புல்லாகி வருகிறதாம். அதோடு, ரிச்சாவின் கலக்கல் கவர்ச்சியை தமிழக ரசிக கோடிகளும் கண்டுகளிக்க, அந்த மெரப்பக்காய் படம் தமிழிலம் முரட்டு சிங்கம் என்ற பெயரில் டப்பாகியுள்ளது. இதனால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப்போகிற உற்சாகத்தில் இருக்கிறார் ரிச்சா.