கூகுள் தன்னை அடித்து கொள்ள யாரும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிருப்பித்துகாட்டியது.தன்னுடைய குரோம் பிரவுசரை புதுப்பித்து உள்ளது.கூகுள் குரோம் தன்னுடைய 10 வது பதிப்பினை அண்மையில் வெளியிட்டது.மூன்று வார சோதனை தொகுப்பிற்கு பிறகு இதை வெளியிட்டது.
இதன் சிறப்பம்சம் ஆகும்.இதை பயன்படுத்திய பிறகு மற்றதை உபயோகபடுத்தமாட்டீர்கள்.
சிறப்பம்சம் பற்றி :
முதலில் அதன் வேகத்தை கூறலாம்.இது முதலில் வந்த பிரவுசரை காட்டிலும் 10 மடங்கு வேகத்தை தருகிறது. Crankshaft JavaScript இதற்க்கு துணை புரிகிறது.
ஒப்பீடு :
ஒரு செயலை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1 184 மில்லி வினாடிகளில் இறக்கி காட்டியது,
அதே செயலை பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ்
ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ்
பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) - 388 மில்லி செகண்ட்ஸ்
புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.
ட் பாக்ஸ் :
இந்த பிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக் கெடுக்கின்றன. இதனை மனதில் கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் (Sandbox) பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருள்ளாக அமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது.
விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்று காட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.
கூகுள் குரோம் 10 பதிப்பினை பெற கீழே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.