புதிய பரிமாணத்துடன் லெனோவா ஸ்மார்ட்போன்


கம்ப்யூட்டர் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனம் லெனோவா. இந்நிறுவனத்தின் மின்னனு சாதன பொருட்களில் அதி நவீன தொழில் நுட்பம் கொடுக்கப்படுவது வாடிக்கையாளர்கள் அறிந்த விஷயம். அந்த வகையில், அதி நவீன தொழில் நுட்பத்துடன் லீபேட் எஸ்-2005 என்ற புதிய ஸ்மார்ட் போனை வெளியிட
முடிவு செய்திருக்கிறது லெனோவா. பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக
இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்பத்தினையும் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜிஞ்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.


1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஸ்கார்பியன் பிராசஸர் இருப்பதால், ஸ்மார்ட்போன் வேகமான முறையில் செயல்படும். கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8260 சிப்செட் மற்றும் கியூவல்காம் அட்ரினோ 220 கிராஃபக்ஸ் பிராசஸர் போன்ற தொழி்ல் நுட்பங்களும் இதில் உள்ளன.  இதன் 5 இஞ்ச் மல்டி தொடுதிரை வசதி 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தை கொடுக்கும். 3ஜி வசதியும் இதில் உள்ளது.
2 கேமரா வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா 2560 x 1920 பிக்ஸல் துல்லியத்தை வழங்கும். இதன் 1.3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமராவினால் 1280 x 1024 பிக்ஸல் துல்லியமும் கிடைக்கும். இந்த லீபேட் எஸ்-2005 ஸ்மார்ட்போன் பேட்டரியையும் சேர்த்து 198 கிராம் எடையை கொண்டது. இருப்பினும், கையாள்வதில் எந்த வித சிரமும் இருக்காது.
அதி நுட்ப செயல் திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் அனைவரின் ஆர்வத்தை தூண்டு என்று எதிர் பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முக்கியமாக மொபைலில் எதிர் பார்ப்பது அதன் தொழில் நுட்பம். அந்த தொழில் நுட்பம் இந்த லெனோவோ லீபேட் எஸ்-2005 ஸ்மார்ட்போனில் கிடைக்கும் என்றால், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget