இந்தியாவில் பரஸ்பர நிதியின் வகைகள்


நம் நாட்டில் பல்வேறு பரஸ்பர நிதி( Mutual Fund Companies ) திட்டங்கள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!
ஏன் இத்தனை திட்டங்கள் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?
அதற்கு முன் பரஸ்பர நிதியை பற்றி தெரிந்து கொள்வோமா?
கைவசம் இருக்கும் சேமிப்புகளை ஆக்கபூர்வமான வகையில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெற்று, அவற்றை முதலீடு செய்து அடையும்
நிகர லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்வது தான் பரஸ்பர நிதி நிறுவனங்களின்( Mutual Fund Companies ) பணி, நோக்கம்.


இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள், `செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸேஞ்ச் போர்டு ஆப் இந்தியா’ (சுருக்கமாக, `செபி’) என்ற அமைப்பிடம் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த செபி அமைப்பு இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அதனை முதலீடுகள் மூலம் நிர்வாகம் செய்கிற அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் படைத்தது.


முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் நிதியை எந்தெந்தப் பங்குகள் (Equity) மற்றும் கடன் பத்திரங்களில் (Debentures and Bonds) லாபகரமாக முதலீடு செய்யலாம் என்பதை ஆய்ந்து தெரிவிக்க, பரஸ்பர நிதி நிறுவனங்களில், இத்துறையில் போதிய அறிவும், அனுபவமும் வாய்ந்த நிபுணர் குழு ஒன்று தொடர்ந்து செயல்படும்.


முதலீட்டாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அந்தப் பரஸ்பர நிதி நிறுவனத்தில் பங்குகள் வழங்கப்படும். இதற்கு `யூனிட்டுகள்’ என்று பெயர். இந்தத் தொகை, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்போது யூனிட்டுகள் பங்குகளாக மாறும்.


குறிப்பிட்ட கால முடிவில் கிடைத்த லாபம் அல்லது அடைந்த நஷ்டத்தை யூனிட்தாரர்கள் அவரவர் யூனிட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பகிர்ந்துகொள்வர்.


முதலீடு செய்ய விரும்புபவர்களின் நோக்கங்கள் வேறுபடுவதால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களும் அவசியமாகின்றன.


பரஸ்பர நிதி திட்டங்களின் வகைகள்:


முடிவுறும் திட்டங்கள் (Close Ended Scheme):


இத்திட்டம், குறிப்பிட்ட தேதியில் அறிவிக்கப்பட்டு மற்றொரு தேதியில் முடிவுக்கு வரும். அதாவது, முதலீட்டாளர்கள் எல்லா காலங்களிலும் இதுபோன்ற திட்டங்களில் சேர இயலாது. இருப்பினும், இத்திட்டம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால் இதன் யூனிட்டுகளை பங்குச் சந்தை மூலமாக வாங்கவோ, விற்கவோ முடியும். இத்திட்டங்களின் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை, அதனை வெளியிட்ட பரஸ்பர நிதி நிறுவனத்திடமே அன்றைய மதிப்புக்கு விற்று திட்டத்தைவிட்டு வெளியேறலாம். இந்த திட்டத்தில் 5-ல் இருந்து 7 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யலாம்.


முடிவுறா திட்டங்கள் (Open Ended Scheme)


இது பிரபலமாக இருக்கும் ஒரு திட்டம். முதலில் சொல்லப்பட்ட திட்டங்களைப் போல் அல்லாமல் இவ்வகைத் திட்டங்களில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். இதில் எத்தனை பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், ஒருவரது முதலீட்டுக்கான வரம்பு எது, இத்திட்டத்தில் இந்நிறுவனம் எவ்வளவு தொகையை திரட்டும் என்பதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லை. அந்த நிறுவனம் விரும்புகிற காலம் வரையில் முதலீட்டாளர்களை சேர்த்துக்கொள்ளலாம்.


இடைவெளி திட்டங்கள் (Interval Scheme)


முடிவுறும் மற்றும் முடிவுறா திட்டங்களின் தன்மையையும் கொண்டவை இவ்வகைத் திட்டங்கள். இத்திட்டங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. அதே நேரம் நிதி நிறுவனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீட்டாளர்களிடமிருந்து இவற்றை அன்றைய மதிப்பில் திரும்ப வாங்கிக்கொள்கின்றன.


பங்கு முதலீட்டு திட்டம் (Equity Mutual Fund)


பரஸ்பர நிதி நிறுவனங்கள் இத்திட்டங்கள் மூலம் திரட்டும் நிதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன.


கடன் பத்திரங்கள் (Debt Mutual Fund)


மத்திய மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் நிதி நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. நிரந்தர வட்டி வருவாய் மற்றும் ஆபத்தில்லாத தன்மைகளை கருத்தில் கொண்டு இவ்வகை முதலீடுகளை பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன.


சரிவிகிதத் திட்டங்கள் (Proportional schemes):


பெயரிலிருந்தே புரிந்திருக்கும். இது பங்கு முதலீட்டுத் திட்டம் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி, பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியும், கடன் பத்திரங்களின் முதலீடு காரணமாக நிச்சயமான வருவாய் மற்றும் பாதுகாப்பும் உறுதியாகிறது.


வளர்ச்சித் திட்டங்கள் (Development projects):


முதலீடு நல்ல வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்குடன், பெருமளவு நிதியை பங்குகளில் முதலீடு செய்கின்றன பரஸ்பர நிதி நிறுவனங்கள். நீண்ட கால அடிப்படையில் முதலீடு வளர்ச்சி காண இத்திட்டம் பயன்படுகிறது.


வருவாய்த் திட்டங்கள் (Revenue schemes):


முதலீட்டாளர்கள் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வருவாயை எதிர்பார்க்கும்பட்சத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அரசு பாண்டுகளிலும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. இதில் நீண்ட கால வளர்ச்சி அதிகமாக இருக்காது என்றாலும் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிரந்தர வருமானம் நிச்சயமாக உண்டு.


குறியீட்டுத் திட்டங்கள் (Coding schemes):


இந்தத் திட்டங்களின் மூலமாகத் திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தை குறியீட்டு எண்களை முடிவு செய்யும் நிறுவனப் பங்குகளில் பரஸ்பர நிதி நிறுவனங்கள்( Mutual Fund Companies ) முதலீடு செய்கின்றன.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget