
பில்லா படத்தில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி நடித்தார் நயன்தாரா. அதன்பிறகு, அவரது கவர்ச்சிக்கென்றே ஒரு தனி ரசிகர் வட்டம் உருவானது. இப்போது செகண்ட் இன்னிங்சில் இருக்கும் நயன்தாராவிடம், நிறைய மாற்றம். குறிப்பாக, "அளவுக்கதிகமான ஆடை குறைப்பு, ஆபாசத்தை தூண்டும் நடன அசைவுகளை வெளிப்படுத்த மாட்டேன் என்று கூறி வருகிறார். அதன் காரணமாக, சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவான, "த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு
"ரீ-மேக் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினையும், தவிர்த்து விட்டார் நயன்தாரா. "அப்படத்தில் ஓவர் கிளாமர், நெருக்கமான காதல் காட்சிகள் உள்ளன. அது, இன்றைய சூழலில் எனக்கு சரிப்பட்டு வராது என்ற காரணத்தையும் சொல்லி மறுத்திருக்கிறார் நயன்தாரா.