பேட்டரியின் வாழ்நாளை அதிகப்படுத்தும் யுக்திகள்!


அதிக பணம் போட்டு வாங்கிய எலக்ட்ரானிக் சாதனத்தில் அடிக்கடி பேட்டரி குறைந்து வருகிறதா? அட அதுக்கும் அப்ளிக்கேஷன் உலகத்தில், தீர்வு இருக்கிறது. பேட்டரியை மிச்சப்படுத்தவும் நிறைய அப்ளிக்கேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் குவிந்துகிடக்கின்றன. இதன் மூலம் எளிதாக பேட்டரியினை சேமித்து, உங்கள் எல்க்ட்ரானிக் சாதனத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கலாம். நமது பக்கத்தில் அப்படி வாசகர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட டாப்-5 பேட்டரி சேவர் அப்ளிக்கேஷன்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.


பேட்டரி பூஸ்டர்:
எலக்ட்ரானிக் சாதனங்களின் பேட்டரியினை புத்துணர்ச்சியோடு செயல்பட வைக்க துணைபுரிகிறது பேட்டரி பூஸ்டர் அப்ளிக்கேஷன். பயன்படுத்தாத அப்ளிக்கேஷன்களை எளிதாக, இந்த பேட்டரி சேவர் அப்ளிக்கேஷன் மூலம் அகற்றிவிட முடியும். இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ஸ்டோரில் எளிதாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.


ஈஸி பேட்டரி சேவர்:
ஈஸி பேட்டரி சேவர் அப்ளி்கேஷனும், பேட்டரியின் ஆற்றலை அதிகப்படுத்த சிறப்பாக பயன்படும். இதில் பேட்டரியின் ஆற்றலை அதிகப்படுத்துவதோடு, ஒவ்வொரு தடவையும் மணிக் கணக்காக சார்ஜ் செய்யும் நேரத்தினையும் மிச்சப்படுத்தி கொடுக்கும். அதோடு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் சிறந்த பாதுகாப்பாக இருக்கும். ஆன்ட்ராய்டு ஸ்டோரில் இந்த அப்ளிக்கேஷனை ஈஸியாக பதிவிறக்கும் செய்யலாம்.


2எக்ஸ் பேட்டரி-பேட்டரி சேவர்:
எந்த ஒரு அப்ளிக்கேஷனையும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்குமா? என்ற கேள்வி மனதில் எழுகிறது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் யூசர் ஃப்ரென்ட்லி வசதியுடன், உருவாக்கப்பட்ட இந்த 2எக்ஸ் பேட்டரி பேட்டரி சேவர் அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து சிறப்பாக பயனடையலாம். இதுவரை கிட்டத்தட்ட 30 லட்சம் டவுன்லோட்களை பெற்ற இந்த அப்ளிக்கேஷன், எந்த அப்ளிக்கேஷன் எவ்வளவு பேட்டரியினை வழங்கும் என்பதையும் சிறப்பான முறையில் காட்டும். இதன் மூலம் தேவையில்லாத அப்ளிக்கேஷன்களை எளிதாக அகற்றிவிடலாம். வாவ் என்று சொல்ல வைக்கும் பேட்டரியின் ஆற்றலை இதில் பெற முடியும்.


ஒன் டச் பேடட்ரி:

பல காலமாக பேட்டரியின் ஆற்றல் உறிஞ்சப்பட்டு வருவதை எண்ணி கவலை கொண்டு வருபவர்களுக்கு, ஒரு நொடியில் தீர்வு இருக்கிறது. இந்த ஒன் டச் பேட்டரி அப்ளிக்கேஷனை ஒரு சொடுக்கில் டவுன்லோட் செய்தால் போதும். பேட்டரி, நேரம், பணம் என்று இந்த மூன்றையும் மிச்சப்படுத்தி கொடுக்கும். ஒன் டச் பேட்டரி சேவரை எளிதாக பயன்படுத்த, கூகுள் ஸ்டோர் சிறப்பாக வழிகாட்டுகிறது.


பேட்டரி டாக்டர் சேவர்+ஏ டாஸ்க் கில்லர்:
பேட்டரி டாக்டர் சேவர்+ஏ டாஸ்க் கில்லர் என்ற அப்ளிக்கேஷனும் சிறந்த ஒன்று என்று கூறலாம். எந்த வகையிலெல்லாம் பேட்டரி அதிகம் வெளியேறுகிறது என்பதை தெரிந்து அந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள முடியும். இப்படி பல பேட்டரி சேவர் அப்ளிக்கேஷன்களை வழங்கும் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் சுலபமாக தேர்வு செய்து கொள்ளலாம்.




பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget