சின்னத் திரையை கலக்கும் கட்டப்பஞ்சாயத்து?


என் புருஷனுக்கு இன்னோரு பொண்ணு கூட தொடர்ப்பு இருக்கும்மா. அவருக்கு நான் காசு சேர்த்து வச்சு பைக் வாங்கி கொடுத்தேன். அதுல என்னைய கூட்டிட்டு போகாம வேற பொம்பளைய கூட்டிட்டு போறார். இது நிர்மலா பெரியசாமி நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு வந்த பஞ்சாயத்து. இது மட்டுமல்ல இதுபோல் தினம் தினம் இங்கே பஞ்சாயத்து நடைபெறுகிறது. மாமியார், மருமகள் பிரச்சினை, காதல் பிரச்சினை, என தினசரி பஞ்சாயத்தும் அடிதடி காட்சிகளும்
லைவ் ஆக இடம் பெறுகின்றன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி என்ற பெயரில் தினந்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அடுத்தவனின் அந்தரங்கம் நமக்கு வேடிக்கைப் பொருளாகிவிட்டது.
சரி விசயத்திற்கு வருவோம். கணவன் மேல் புகார் சொன்ன பெண்ணிற்கு நிர்மலா பெரியசாமி என்ன தீர்ப்பு சொன்னார் தெரியுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
அந்தப் பெண்ணின் கணவனை கூப்பிட்டு விசாரித்தார் நிர்மலா, அவன் சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக தனக்கு யாருடனும் தொடர்பு இல்லை. என் மனைவிதான் என்மேல் தேவையில்லாமல் சந்தேகப்படுகிறாள் என்று கூறினான்.
மாறி மாறி சண்டை காட்சிகள்தான் அரங்கேறின. நிர்மலா பெரியசாமியோ கணவனுக்கு சாதகமாக பேச ஆரம்பித்தார். உடனே புகார் சொன்ன பொண்ணிற்கு கோபம் வந்து விட்டது. ஸ்டுடியோவை விட்டு கோபமாக வெளியேறிவிட்டார்.
என்ன செய்வதென்று தெரியாத விழித்த பஞ்சாயத்து தலைவி நிர்மலா பெரியசாமி, உன்னோட மனைவிக்கு மன வியாதிதான் வந்திருக்கிறது. சந்தேகம் அதிகமானால் சிக்கல்தான் எனவே நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள் என்று தீர்ப்பு கூறி பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மனைவிக்கு மனநலம் சரியில்லை என்பதைக்கூட டிவி நிகழ்ச்சிக்கு வந்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறான் ஒரு கணவன். நிஜமாகவே அந்தப் பெண்ணிற்கு மனநலம் சரியில்லை என்று வைத்துக்கொண்டால் எழுந்த கேள்வி?.
இதேபோல்தான் கேப்டன் டிவியில் மனம் விட்டுப் பேசுங்கள் என்ற பெயரில் பஞ்சாயத்து நடத்தும் குட்டி பத்மினி. அவரிடமும் இதுபோன்ற பஞ்சாயத்துக்கள்தான் வருகின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் கதையல்ல நிஜம் என்ற பெயரில் நடிகை லட்சுமி நடத்திய பஞ்சாயத்தும் இந்த ரகம்தான். அதில் அழுகைதான் இருந்தது. ஆனால் நிர்மலா பெரியசாமி நடத்தும் பஞ்சாயத்தில் அடிதடி அதிகம் இருக்கிறது என்கின்றனர் பார்வையாளர்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget