பழைய பதிப்பிலிருந்து விண்டோஸ் 8 பதிப்புக்கு மாற்றும் மென்பொருள்


புதிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்தினை உங்கள் கணனியில் முந்தைய விண்டோஸ் பதிப்புக்களிலிருந்து Upgrade செய்து கொள்ள முடியும். விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு Upgrade செய்வதற்காக அப்பதிப்பினை பெறுவதற்க்கு முன்னர் Windows 8 Upgrade Assistant எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து அதனை உங்கள் கணனியில் இயக்கவும். இம்மென்பொருள் இயங்கி சிறிது நேரத்தில் உங்கள் கணனியானது
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை Upgrade செய்வதற்கு பொருத்தமான வன் பொருட்களை கொண்டுள்ளதா என தெரிவிக்கும்.

இந்த செயல் முறையில் சாதகமான பதில் கிடைத்தபின் விண்டோஸ்  தளத்திற்கு சென்று விண்டோஸ் 8 பதிப்பினை பெறலாம் அல்லது குறித்த இயங்குதளத்தினைக் கொண்ட DVD காணப்படின் அதனை பயன்படுத்தவும். Upgrade செயல் முறையானது Windows 7 பதிப்பிலிருந்து மேற்கொள்ளப்படுமாயின் முன்பு காணப்பட்ட மென்பொருட்கள் மற்றும் கோப்புக்கள் பாதுகாப்பாக புதிய பதிப்பிற்கு இடம்மாற்றப்படும். அப்படியல்லாமல் ஏனைய பதிப்புக்களிலிருந்து Upgrade செய்தால் மென்பொருட்கள் அனைத்தும் புதிதாக நிறுவவேண்டிய அவசியம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்