ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


சென்ற வாரம் வெளியான எந்தப் படமும் தேறும் என்று தோன்றவில்லை. ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட படம் கிளவுட் அட்லஸ். அதுவும் 10 மில்லியன் டாலர்களுக்கு குறைவாகவே வசூலித்துள்ளது. இந்த எதிர்பாராத அடி காரணமாக மூன்றாவது வாரத்தை எட்டிப் பிடித்த ஆர்கோ பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

5. டேக்கன் 2
நான்காவது வார இறுதியில் இப்படம் எட்டு மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 117 மில்லியன் டாலர்கள்.

4. பாராநார்மல் ஆக்டிவிட்டி 4
முதல் வாரம் முதலிடத்தில் இருந்த இந்தப் படம் சென்ற வார இறுதியில் 8.68 மில்லியன் டாலர்களை மட்டும் வசூலித்து நான்காவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. இதன் இதுவரையான வசூல் 42.6 மில்லியன் டாலர்கள்.

3. கிளவுட் அட்ல‌ஸ்
மறுபிறப்பு போன்ற இந்திய புராண நம்பிக்கைகள் நிறைந்திருக்கும் இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 9.4 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2. ஹோட்டல் ட்ரான்சில்வே‌னியா
இந்த வேம்பயர் அனிமேஷன் படம் சென்ற வார இறுதியில் 9.5 மில்லியன் டாலர்களை சம்பாதித்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன் ஐந்து வார வசூல் 130 மில்லியன் டாலர்கள்.

1. ஆ‌ர்கோ
டேக்கன் 2 முதல் இடத்தில் இருந்த போது அதற்கு கீழ் இருந்த பட‌ம், மூன்று வாங்கள் ஆன நிலையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வசூல் சுமார்தான். சென்ற வார இறுதியில் 12.3 மில்லியன் டாலர்கள். இதுவரை 60.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்