ஹீரோக்களை கண்டுகொள்ளாத பிரபல நடிகை

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு முன்பு வரை எந்த ஹீரோக்களைப்பார்த்தாலும் சிரிக்க சிரிக்க பேசுவார் ஹன்சிகா. ஆனால் அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். அதாவது, படப்பிடிப்பு தளங்களுக்கு வந்தாலும் எதிரில் நிற்கும் ஹீரோக்களை சட்டை செய்வதே இல்லை. நேராக டைரக்டரிடம் சென்று டயலாக் பேப்பரை வாங்கியபடி அதை மனப்பாடம செய்யத் தொடங்கி விடுபவர், மதிய இடைவேளைகளில், கேரவனுக்குள் சென்று பதுங்கிக்கொள்கிறாராம்.

இதன் காரணமாக, அவருடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு ரிலாக்சே இல்லையாம். இதனால் தங்களைத்தேடி வந்து அவர் பேசுவார் என்று எதிர்பார்த்திருப்பவர்கள் ஏமாந்து போகிறார்களாம். இதனால் சில நடிகர்கள், மறைமுகமாக ஹன்சிகாவுக்கு எதிர்ப்பாக செயல்படத் தொடங்கி வருகிறார்கள். படாதிபதிகள் அவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தால், வேறு சில நடிகைகளின் பெயர்களை முன்வைத்து அவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்களாம். ஆனால் இந்த விவகாரத்தை சிலர் ஹன்சிகாவின் முன்வைக்கிறபோது, எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. இவர்களுடன் கடலை போட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரமே இல்லை என்று அதை பெருசுபடுத்தாமல் பேசுகிறாராம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்