சென்ற வாரம் வெளியான டுவிலைட் சாகா - பிரேக்கிங் டவுன் 2 அமோகமான வசூலை பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
5. பிளைட்
டென்சில் வாஷிங்டன் நடித்திருக்கும் பிளைட் 3 வது வார இறுதியில் 8.8 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் மொத்த யுஎஸ் வசூல் 61.5 மில்லியன் டாலர்கள்.
4. ரெக்-இட் ரால்ப்
இந்தப் படமும் 3 வது வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 18.6 மில்லியன் டாலர்கள். இதுவரை யுஎஸ் ஸில் 122 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
3. லிங்கன்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருக்கும் இப்படம் விமர்சனாPதியாக பொpதும் பாராட்டப்படுகிறது. ஆனால் கமர்ஷியல் படங்களுடனான போட்டியில் பின் தங்கிவிட்டது. வெளியான முதல் வார இறுதியில் 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.
2. ஸ்கைஃபால்
உண்மையிலேயே ஃபால்தான். முதல் வார இறுதியைவிட இரண்டாவது வார இறுதியில் வசூல் பாதியாக குறைந்திருக்கிறது. சென்ற வார இறுதி வசூல் 41.1 மில்லியன் டாலர்கள். இதுவரை 161 மில்லியன் டாலர்களை யுஎஸ் ஸில் மட்டும் வசூலித்துள்ளது.
1. டுவிலைட் சாகா - பிரேக்கிங் டவுன் 2
இந்த வேம்பயர் சீரிஸின் கடைசிப்படமான இது வார இறுதியில் 141 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டவர் சூஜம்ஸ்பாண்ட். படம் பரவாயில்லை ரகம் என்றாலும் யுஎஸ் இளசுகளுக்கு இந்த வேம்பயர்தான் இப்போது இஷ்ட தெய்வம். வசூலில் இப்படம் ஒரு கலக்கு கலக்கும் என்கிறார்கள்.