சர்சைக்குரிய கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற அந்த சங்கீதமான நடிகை தன்னை விட வயது குறைந்த இளம் பாடகரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவுக்கு புதிதான அந்த பாடகரை சங்கீதம் திருமணம் செய்து கொள்ளும்போது உன்னை பெரிய நடிகனாக்கியே தீருவேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம். எல்லா வகையிலும் செல்வாக்கான நடிகை அதைச் செய்வார் என்ற நம்பிக்கையில்தான் வயது வித்தியாசம் பாராமல், பெற்றவர்களை விட்டு விலகி பாடகர் திருமணம் செய்து கொண்டாராம்.
தற்போது சங்கீதம் ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டார். ஆனால் வாக்கு கொடுத்த மாதிரி பாடகரை நடிகராக்கவில்லை.
இப்போது நடிகர் சங்கீதத்தை வற்புறுத்த தொடங்கியிருக்கிறாராம். நான் சினிமாவுக்கு வந்தே நடிக்கத்தான். உன்னை நம்பித்தான் திருமணம் செய்தேன். இப்போதே என்னை வைத்த ஒரு படம் தயாரிச்சு என்னை ஹீரோவாக்கு இல்லாவிட்டால் என்னை ஆளை விடு நான் வேறு வழி பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறாராம். குழந்தை பிறந்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவார் என நினைத்த நடிகைக்கு இப்போது கணவரே பெரும் பிரச்சினையாகி இருக்கிறாராம். இதனால் கணவனை வைத்து சொந்தப் படம் எடுக்க பைனான்சியர்களை தேடிக் கொண்டிருக்கிறாராம். திருமணத்துக்கு முன்பு நடிகைக்கு ஓடி ஓடி உதவி செய்த பைனான்சியர்கள். இப்போது ஆளைவிட்டால் போதும் என்று ஓட்டம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.