கவுதம்மேனன் இயக்கத்தில் நடித்துள்ள, "நீ தானே என் பொன்வசந்தம் என்னை பெரிய அளவில் பேச வைக்கும் என்று கூறிவருகிறார் சமந்தா. "அப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம், இன்னும் என்னைவிட்டு நீங்காமல் நிழலாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த அளவுக்கு இதுவரை நான் நடித்ததில் பெஸ்ட் கேரக்டரை தந்துள்ளார் கவுதம். இப்படம் திரைக்கு வரும்போது, காதலர்கள் கொண்டாடி மகிழ்வர்; காதலிக்காதவர்கள் காதலிக்க நினைப்பர். அப்படியொரு காதலின் மகத்துவத்தை சொல்லும் படமாக அமைந்திருக்கிறது என்று சொல்லும் சமந்தா
, "தமிழைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் "கடல் ஷங்கரின் "ஐ படங்களில் இருந்து விலக நேர்ந்தது எனக்கு பெரிய இழப்புதான். என்றாலும், "நீ தானே என் பொன்வசந்தம் படத்திற்கு பின், மீண்டும் அவர்கள் படங்களில் நடித்து, விட்ட இடத்தை பிடிப்பேன் என்கிறார்.