
கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் கிடைத்தபோது ரொம்ப சந்தோசமடைந்தேன். பரதேசி படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலோடு காத்திருந்தேன்.
முதல் நாள் அவர் காட்சிகளை விளக்கி நடிக்க வைத்தபோது, அவருடன் ஒர்க் பண்ணுவது புதுமையான அனுபவமாக தெரிந்தது. ஆனால் போகப்போக, சில காட்சிகளுக்கு அவர் எதிர்பார்த்தது மாதிரி என்னால் நடிக்க முடியவில்லை. அதனால் திரும்பத்திரும்ப அந்த காட்சியில் என்னை நடிக்க வைத்து பெண்டை நிமிர்த்தி விட்டார். அதுமட்டுமின்றி, எங்காவது ஒரு சின்ன தவறு செய்தாலும் கண்டு பிடித்து விடுவார். அதனால் பரதேசி படப்பிடிப்பு முடியுற வரை எனக்கு திக்கு திக்கென்றிருந்தது. ஆக, பாலா சார் ரொம்ப டேஞ்சரான ஆளு. அவருகிட்ட ரொம்ப கவனமாக வேலை செய்யனுங்கிறத நான் தெரிஞ்சிக்கிட்டேன் என்று பரதேசி பட திக் திக் அனுபவங்களை சொல்கிறார் வேதிகா.