Taken சினிமா விமர்சனம்


சில படங்கள் வெளியுலகெல்லாம் ஓடி, DVDயிலும் வந்த பிறகுதான் வட அமெரிக்க வெள்ளித்திரைக்கு வரும் - அவ்வாற படங்களில் இதுவும் ஒன்று. பிந்தி வந்தாலும், வெகுவாக பாராட்டுக்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. சாதாரணமான ஒரு ஆக்ஸன் கதைதான். என்றாலும் சிறந்த ஒரு முன்னணி நடிகர், செறிவான இயக்குணர், விறுவிறுப்பான படத்தொகுப்பு என்பவற்றை புகுத்திவிட கிடைக்கின்றது காற்றெனப் பறக்கின்ற ஒரு ஆக்ஸன் படம்.
Bryan Mills (Liam Neesan) ஒரு CIA உளவாளி. வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒற்றுவேலையில் செலவழிக்கும் இவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு, இன்னொரு கல்யாணம் செய்துகொண்டு மகளையும் அழைத்துகொண்டு சென்றுவிடுகின்றார் இவரது மனைவி. காலம்கடந்தபின் ஞானோதயம் பெறும் இவர் மனைவியைத் தொலைத்தாலும் மகளைத் தொலைக்க மாட்டேன் என்ற முடிவுடன் CIA வேலையை விட்டுவிட்டு மகள் இருக்கும் அதே நகரில் வசித்துவருகின்றார். இப்படியான ஒரு சிக்கலான பிணைப்பை இவர் காப்பாற்றிக் கொண்டிருக்க, teenage பெண்ணான இவரது மகள் Kim (Maggie Grace) நண்பிகளுடன் France’ற்கு போகப் போகின்றேன் என்று வந்து நிற்கிறாள். வயது வந்தவர்கள் துணையில்லாமல் தொலைதூரத்திற்கு மகளை அனுப்புவது Bryan’ற்கு சற்றும் விருப்பமில்லாவிடினும், மகளினதும் முன்னாள் மனைவியினதும் வற்புறுத்தல்களினால் அரை மனதுடன் சம்மதிக்கின்றார். France விமான நிலையத்தில் வந்து இறக்கும் Kim’ஐயும் அவளது நண்பியையும் இலக்கு வைக்கின்றது பாலியலிற்காக பெண்களைக் கடத்தும் ஒரு குழுவென்று; இவர்களை பின் தொடர்ந்து வந்து இவர்களது தங்குமிடத்தையும் கண்டுகொள்கிறது. மகளை தனியே அனுப்பிவிட்டு தொடர்ந்து பதற்றத்தில் இருக்கும் Bryan, மகளிற்கு தொலைபேசி அழைப்பெடுக்கின்றார். இவர் Kim’உடன் உரையாடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் அந்தக் கடத்தல் கும்பல் வீடுடைப்புச் செய்து இரு பெண்களையும் கடத்த முனைகின்றது. ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து கொண்டு அந்த கடத்தலை தவிர்க்க முடியாதென உணர்கின்ற Bryan, இருக்கும் சில நொடிகளிற்குள் கடத்தல்காரர்களின் சில அங்க அடையாளங்களை Kim’இடமிருந்து கேட்டறிகின்றார். அடுத்து Kim கடத்தப் பட்டுவிட, மகளை கண்டுபிடிக்கும் வெறியுடன் France’ற்கு வந்து வேட்டையைத் தொடங்குகின்றார் Bryan. குறுகிய காலத்திற்குள் மகளை கண்டுபிடிக்கவில்லையென்றால், பிறகு மகளின் விலாசமும் இருக்காது என்பதான ஒரு சூழ்நிலை. அவரின் பதட்டம், படத்தின் ஓட்டத்திற்கும் வந்துவிட பிறகு ஒரே விறுவிறுப்புத்தான்.

Liam Neeson ஒரு சிறந்த நடிகர். Batman Begin’இல் வில்லனாக இவரைப் பார்த்திருப்பீர்கள். 50 வயது தாண்டியும் ஆக்ஸன் பாத்திரத்தில் களைகட்டியிருக்கின்றார். மகளினுடனான அந்த தொலைபேசி உரையாடலில், குரலாலேயே நடித்திருக்கின்றார் என்று சொல்லலாம். படம் Quantum of Solace, Bourne Identity என்று முன்னைய பல ஆக்ஸன் படங்களை ஞாபகமூட்டினாலும் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவற்றின் ஞாபகம் வந்து குழப்பவில்லை. ஆக்ஸன் விரும்பிகள் நம்பிப் பார்க்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget