எ குட் டே டு டை ஹார்டு ஹாலிவுட் சினிமா விமர்சனம்


ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ப்ரூஸ் வில்லிஸ் நடித்த அதிரடி ஆக்ஷ்ன் படம் டை ஹார்டு, 25 ஆண்டுகளுக்கு (1988) முன்பு வந்த சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து டை ஹார்டு படங்கள் மூன்று வந்துவிட்டன. இப்போது வெளிவந்திருப்பது டை ஹார்டு வரிசையில் ஐந்தாவது படம். அமெரிக்க போலீஸ் அதிகாரி ஜான் மெக்லேன் எதிரிகள் இரக்கமின்றி போட்டுத் தள்ளும் நேர்மையான போலீஸ் அதிகாரி (ப்ரூஸ் வில்லிஸ்) டை ஹார்டு தொடரில், முதல் நான்கு படங்களில்
58 பேர்கள். எதிரிகளை ப்ரூஸ் வில்லிஸ் கொன்றிருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கிறது. 2007ல் வந்த லிவ் ப்ரீ ஆர் டை ஹார்டு படத்தில், ப்ரூஸ் வில்லிஸ், பிரிந்து சென்ற தன் மகளுக்காக தீவிரவாதிகளை அழிக்கிறார். இந்த படத்தில் தனது மகன் ஜாக்கை காப்பாற்ற பல சாகசங்கள் செய்கிறார்.

கதைக்களம் மாஸ்கோ நகரம் (முன்னாள் சோவியத் யூனியன்) இவர் பல ஆண்டுகள் சந்தித்திராத மகன் ஜாக், ரஷிய நாட்டின் சிறையில் இருக்கிறார். ஜாக், போர் முறைகளில்  நன்கு பயிற்சி பெற்ற அமெரிக்க உளவுத்துறை (சி.ஐ.ஏ)யின் அதிகாரி என்பது தந்தைக்கு தெரியாது. பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ள அணு ஆயுத கடத்தலை தடுக்கவே ஜாக் அங்கு செல்கிறார். ஜாக்கும் அவர் தந்தை ஜான் இருவரும் சேர்ந்து எதிரிகளை அழிக்கிறார்கள் என்பது மீதி.

படத்தின் ஹைலைட்டாக இருப்பது மாஸ்கோ நகர தெருக்களில், பலத்த டிராபிக் இடையே மயிர் கூச்செரியும் கார் சேஸிங். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரும் விறுவிறுப்பான கார் துரத்தல் காட்சியில், ப்ளை ஓவர் கார்கள் பறந்து, கீழே வருவது, டிராபிக் விதிகளையோ, சிக்னல்களையோ பற்றி சிறிதும் கவலைப்படாமல், ப்ரூஸ் வில்லிஸ் அசுர வேகத்தில் கார் ஓட்டுவது, பல கார்களை இடித்து, ஓரம் கட்டி கவிழ்த்து, அவர் காரை செலுத்துவது சுவாரஸ்யமான காட்சி, பல மாடிக் கட்டிடத்தில் ஒரு தளத்திலிருந்து எதிரியின் ஆட்களிடமிருந்து தப்பிக்க, கண்ணாடி வழியாக ஜான், ஜாக் இருவரும் அப்படியே குதிக்கிறார்கள். எந்தவித அடி, பாதிப்பும் இன்றி தப்பித்து ஓடி செல்வது, எப்படி சாத்தியமாகுமோ, தெரியவில்லை.

ப்ரூஸ் வில்லிஸ் ஒரு டாக்சியில் பயணிக்கும் போது, டாக்சி டிரைவர், பிரபல அமெரிக்க பாடகர், நடிகர் பிராங்க் சினெட்ராவின் பாட்டை ரசித்துப் பாடுவார். ஒரு புத்தகத்தை பார்த்து ப்ரூஸ் வில்லிஸ் கஷ்டப்பட்டு ரஷிய மொழியில் பேசும் போது, அவர் நல்ல ஆங்கிலத்தில் பதிலளிப்பதும் டாக்சி சவாரிக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று ப்ரூஸ் வில்லிஸ் கேட்கும் போது என் பாட்டை ரசித்தீர்கள், அதுவே போதும், டாக்சி பயணம் இலவசம் என்று அவர் சொல்லுவதும் நல்ல நகைச்சுவை. ஹெலிகாப்டர் சண்டைகள், கார் துரத்தல், நன்றாக படமாக்கியிருக்கிறார்கள்.

ப்ரூஸ் வில்லிஸ், ஜான் மெக்லேனாகவும் ஜெய் கார்ட்டினி ஜாக் மெக்லேனாகவும் நடித்திருக்கிறார்கள். ஜான் மூர் இயக்கம்.

அதிரடி ஆக்ஷன் பிரியர்களுக்கும், ப்ரூஸ் வில்லிஸ் ரசிகர்களுக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget