5. சுண்டாட்டம்
சென்னையில் சமீபகாலம்வரை கேரம் விளையாட்டு சூதாட்டமாக புழங்கி வந்தது. அதனை அடிப்படையாக வைத்து தயாராகியிருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் வெளியானது. முதல் மூன்று தின வசூல் 5.7 லட்சங்கள்.
4. ஹரிதாஸ்
இந்த வருடத்தின் நல்ல முயற்சிகளுள் ஒன்றான ஹரிதாஸுக்கு ரசிகர்கள் ஆதரவு அவ்வளவாக இல்லை. சென்ற வார இறுதியில் 4.8 லட்சங்களையும், வார நாட்களில் 5.6 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 21.6 லட்சங்கள் மட்டுமே.
3. ஒன்பதுல குரு
மனிதனின் மலிவான ரசனையை நம்பி எடுத்திருக்கும் படம். சென்ற வார இறுதியில் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 21.7 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. விஸ்வரூபம்
தொடர்ந்து அதே இரண்டாவது இடம். வார இறுதியில் 18.2 லட்சங்களையும், வார நாட்களில் 24.1 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 11.74 கோடிகள். துப்பாக்கி வசூலை எட்டிப் பிடிக்க இன்னும் இரண்டரை கோடிக்கு மேல் வசூலிக்க வேண்டும்.
1. அமீரின் ஆதிபகவன்
சென்ற வார இறுதியில் 11.41 லட்சங்களையும் வார நாட்களில் 40.8 லட்சங்களையும் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்று வார இறுதியில் இதன் சென்னை வசூல் 3.8 கோடிகள்.