மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் போன்களுக்காக வெளியிட்ட சிறப்பு இயங்குதளத்தையே விண்டோஸ் போன் 8 இயங்குதளம் என்கிறார்கள். இது மொபைல் போன்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையான இயங்குதளங்களை பயன்படுத்தினால் மொபைல் போனின் செயல்பாடு மிகவும் சிறப்பாகவும், வேகமாகவும் இருக்குமென பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
சிம்பியன் வகை இயங்குதளத்தை பயன்படுத்திவந்த நோக்கியா நிறுவனம் சில மாதங்களாகவே விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மொபைல் போன்களை வடிவமைத்து வெளியிடுகிறது. HTC, நோக்கியா போன்ற மொபைல் போன்களை தயாரிக்கும் நிறுவனங்களும் விண்டோஸ் போன் 8 இயங்குதளத்தை பயன்படுத்துகிறது.
விண்டோஸ் போன்கள் பற்றிய சிறப்புத்தகவல்கள்...
1.போடோக்களை எடிட் செய்வது மிகவும் சுலபம். இதற்காக அப்ளிகேசன்கள் உள்ளன.
2.ஈமெயில் பயன்படுத்துவது மிகவும் சுலபம்.
3.வேறுமொழி தகவல்களை எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மொழிமாற்றம் செய்யும் வசதியும் உள்ளது.
4.பாடல்களை ரசிக்க சிறப்பு அப்ளிகேசன்கள்.
5.போனின் பேட்டரியை சேமிப்பதும் சுலபம்.
6.ஆன்ட்ராய்டு போன்களைவிட அதிகநேரம் பயன்படுத்தலாம்.
7.ஸ்கைப் கால்கள் செய்வதும் எளிது!
8.எழுத்துக்களின் அளவை எளிதாக மாற்றம் செய்யலாம்.
9.அழகான வடிவமைப்பு. இதனால் பயன்படுத்துவது மிகவும் சுலபம்.
10. இண்டர்நெட் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. அதிகவேகமாக இருக்கும். பாதுகாப்பானதும்கூட!
11. ஷர்ட்கட்டுகள் இருப்பதால் வேலைகளை சுலபமாக முடிக்கலாம்.
12. எந்த மொழியை வேண்டுமானாலும் புதிதாக சேர்த்துக்கொள்ளலாம்.
13. இணையத்தில் சாட் செய்வது, ஃபேஸ்புக் பயன்படுத்துவது என அனைத்தும் மிகவும் எளிமையானதே!
14. காப்பி, பேஸ்ட் வசதிகளும் உள்ளன.
15.Xbox வசதியை பயன்படுத்துவதும், அதை கையாள்வதும் எளிது.
16. கிளவுட் கணினி என்ற வசதியை இந்த விண்டோஸ் போன்களில் பயன்படுத்துவது ரொம்பவே ஈசியானது.
17. பாடல்கள் கேட்பதற்கு அருமையாக இருக்கும். முன்பெல்லாம் நோக்கியா போன்கள் என்றால் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்காது என்ற குற்றச்சாட்டு இருக்கும். அதை சரிசெய்ய விண்டோஸ் இயங்குதளம் உதவியிருக்கிறது.
18. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் வசதியும் உள்ளது.
19. குறிப்புகள் எடுப்பதும், கோப்புகளை உருவாக்குவதும் அவற்றை மாற்றியமைப்பதும் சுலபமானது.